Changes of German Govt Policy in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு முதல் பல மாற்றங்களை 2022 அக்டோபர் கொண்டு வர உள்ளது.
அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்…
வருடாந்திர வருமான வரி தாக்கல்
வழக்கமாக ஜூலைமாதம் 31ஆம் திகதி வரி செலுத்துவோர் வருமான வரி தாக்கல் செய்வார்கள். ஆனால், கோவிட் காரணமாக அது அக்டோபர் 31க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தொலைபேசி கட்டணங்கள் உயர்கின்றன.
அக்டோபர் 1 முதல் தொலைபேசி (fixed phone line) கட்டணங்கள் 2 யூரோக்கள் உயர இருக்கின்றன.
ஜேர்மனியில் குறைந்தபட்ச ஊதியம் மீண்டும் உயர இருக்கிறது
2022இல் ஏற்கனவே ஜனவரி மாதம் ஒருமுறையும், ஜூலையில் ஒருமுறையும் குறைந்தபட்ச ஊதியம் அதிகரித்த நிலையில், தற்போது அக்டோபர் 1ஆம் திகதி முதல் மீண்டும் குறைந்தபட்ச ஊதியம் உயர இருக்கிறது.
ஒரு மணி நேரத்துக்கு 10.45 யூரோக்களிலிருந்து 12 யூரோக்களாக உயர இருக்கிறது குறைந்தபட்ச ஊதியம்.
புதிய கோவிட் விதிகள்
ஜேர்மனியின் புதிய ‘அக்டோபர் முதல் ஈஸ்டர் பண்டிகை வரை’யிலான கோவிட் விதிகள் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வருகின்றன,அவை 2023 ஏப்ரல் 7ஆம் திகதி வரை அமுலில் இருக்கும்.
தடுப்பூசி நிலை விதிகளில் மாற்றம்
அக்டோபர் 1ஆம் திகதி முதல், மூன்று கோவிட் தடுப்பூசி பெற்றவர்கள், அல்லது இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்களில் முதல் தடுப்பூசிக்கு முன்பு ஆன்டிபாடி
சோதனையில் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக பரிசோதனையில் தெரியவந்தவர்கள்
அல்லது ஏதாவது ஒரு கட்டத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்தவர்கள், ஆகியோர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களாக கருதப்படுவார்கள்.
எரிவாயு விலை தொடர்பில் அரசு செய்ய இருக்கும் உதவி
மக்கள் மீது எரிவாயு விலையேற்றத்தை சுமத்தக்கூடாது என்பதற்காக, எரிவாயுவின் விலைக்கும் எரிவாயு இறக்குமதி செய்வோர் செலுத்தும் கட்டணத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அரசே ஏற்றுக்கொள்ள இருக்கிறது.
அக்டோபர் முதல் எரிவாயு மீதான VAT கட்டணத்தை பெடரல் அரசு குறைக்க உள்ளது.
சிறு பணிகளுக்கான வருவாய் வரம்பு உயர்த்தப்படுகிறது
வரிகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு உட்படாத சிறு பணிகளுக்கான வருவாய் வரம்பை அரசு உயர்த்துகிறது.
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான எழுத்துத் தேர்வுக்கு புதிய கேள்விகள்
ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான எழுத்துத் தேர்வில் புதிய கேள்விகள் இடம்பெற உள்ளன.
பின்னோக்கித் திரும்பும் கடிகாரங்கள்
அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கடிகாரங்கள் ஒரு மணி நேரம் பின்னோக்கி நகர உள்ளன.
தாவரங்களை ட்ரிம் செய்ய அனுமதி
தோட்டங்கள் வைத்திருப்போர் தங்கள் செடி, கொடிகள், மரங்களை ட்ரிம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
மார்ச் முதல் செப்டம்பர் வரை, பறவைகள், விலங்குகள் மரங்களில் கூடுகட்டியிருப்பதால் அவற்றை தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக, அந்த காலகட்டத்தில் மரம், செடி, கொடிகளை ட்ரிம் செய்ய பெடரல் இயற்கை பாதுகாப்பு சட்டம் தடை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Changes of German Govt Policy in Tamil , Changes of German Govt Policy in Tamil News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.