Sunday, January 19, 2025
Homeபெற்றோர்நாம் நமது பிள்ளைகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும், ஆனால் பயன்படுத்தக் கூடாத 5 வசனங்கள்

நாம் நமது பிள்ளைகளுக்கு அன்றாடம் பயன்படுத்தும், ஆனால் பயன்படுத்தக் கூடாத 5 வசனங்கள்

- Advertisement -
How-To-use-words-to-kids-kidhours
How-To-use-words-to-kids-kidhours

1. நீ என்னை ‘பைத்தியகாரி’ ஆக்கி விடுவாய்

- Advertisement -

இது உண்மையானதாக இருக்கலாம். ஆனால் சிறுவர்வளிடம் சொல்லத் தேவையற்ற உண்மையான பல நூறு விடயங்கள் காணப்படுகின்றது. உங்களின் குழந்தைகள், உங்களை பைத்தியக்காரராக்குகின்றார்கள், கோபமூட்டுகின்றார்கள், போன்ற விடயங்களை குறிப்பிடுவதன் மூலம், அடுத்தவர்களின் நடத்தைகளுக்கு தாமே பொறுப்பானவர்கள் என்ற தகவலையே நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம். இது நியாயமற்றதாகும். இதனால் எல்லா விடயங்களுக்கும் தாமே குற்றவாளிகள் என்ற உணர்வை அவர்கள் ஏற்படுத்திக்கொள்ள கூடும். எனவே, உள வெளிப்பாடுகளை முகாமை செய்வது பற்றிய முன்னுதாரணமாக நீங்கள் திகழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். உங்களின் கோபத்திற்கு சிறுவர்களை குற்றம் சாட்டுவதற்கு பதிலாக ‘அம்மா இப்போது கோபமடைந்திருக்கின்றேன். ஏனவே, நாம் அமைதியடைவதற்காக கொஞ்சம் வெளியே சென்றுவரப்போகின்றேன்’ போன்ற வசனங்களை பயன்படுத்துங்கள்.

2. நான் சொன்னேன் அல்லவா..

- Advertisement -

சிறுவர்களுக்கான அதிகாரத்தை பொறுத்தவரை, கண்மூடித்தனமான பின்பற்றலை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிரபார்ப்பை இவ் வசனம் வெளிப்படுத்தி நிற்கின்றது. பிரச்சினை தீர்வு, திறந்த சிந்தனை இது மட்டந்தட்டுவதோடு, குடும்ப சட்டதிட்டங்களை விளங்கிக்கொள்வதற்கான அடிப்படை தளத்தையும் இல்லாது செய்கின்றது. எமது குழந்தைகளின் நிபுணத்துவ தேடலை, கருத்துக்களை நாம் மட்டந்தட்டாது ஆர்வமூட்ட வேண்டும். அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என நீங்கள் வேண்டும் போது அதற்கான நியாயத்தை அறிந்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். ஆக்கபூர்வமான முறையில் சிந்திப்பதற்கும் செயற்படுதற்கும் இடமளியுங்கள்.

- Advertisement -

3. அழுவதை இப்போதே நிறுத்து

‘அழுகையின்’ வரலாற்றில் இவ்வசனத்தை பயன்படுத்தி தனது குழந்தை அழுவதை நிறுத்திய பெற்றோரை காண முடியவில்லை. ஏற்கெனவே கடினமாகவுள்ள நிலைமைக்கு மேலும் கட்டுப்பாட்டை இழக்கச் செய்வதாகவும், சிறுவர்களை அச்சமூட்டுவதாகவும், பதற்றை தோற்றுவிப்பதாகவுமே அமையும். ஏதாவது, ஒரு பிரச்சினைக்காக நீங்கள் அழுதுகொண்டிருக்கும் போது உங்களின் கணவன் ‘அழாதே, அழுகையை நிறுத்தவில்லைன்னா அடித்து போடுவேன்’ என்று சொன்னால் நீங்கள் தேறிவிடுவீர்களா? அல்லது மேலும் அழுவீர்களா? அழுகை என்பது துர்நடத்தை ஒன்றல்ல. உண்மையில், அழுகை என்பது ஆரோக்கியமான இயல்புகளில் ஒன்றாகும்.

4. ‘இது தான் நமது விதி’

எதையும் செய்ய முடியாத நிலையில் இவ் வசனத்தை நாம் பயன்படுத்துவதுண்டு. நிலைமை சிறுவர்கள் பாதிப்படைந்திருக்கும் போது அவர்களை தேற்றுவதற்காக நாம் இதனை பயன்படுத்தினாலும், அவர்கள் தமது பிரச்சினையில் இருந்து மீண்டு வருதற்கு இது எவ்விதத்திலும் உதவியளிக்காது. வாழ்வின் துயரங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற தகவலையே இது அவர்களுக்கு வழங்கும். இந் நிலைமை தற்காலிகமானது என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள், முடிந்தால் நிலைமையை மாற்றுவதற்கு நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சியை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள், காண்பியுங்கள். அவர்கள் சக்கதியற்றவர்கள் அல்ல, ஆற்றலுள்ளவர்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

kids-happy-with-talking-kidhours
kids-happy-with-talking-kidhours

5. நீங்கள் அதிக உணர்வை வெளிப்படுத்துகின்றீர்கள்

இது சிறுவரகளின் உணர்வுகளுக்கு மதிப்பில்லை என்ற தகவலையே வெளிப்படுத்தி நிற்கும். ஏனையவர்கள் கவலையாக இருக்கும் போது அதற்கு மதிப்பளிக்கத் தேiயில்லை என்பதை உணர்த்தி நிற்கும். உள உணர்வை வெளிப்படுத்தி நிற்பது தவறானது என்பதை அவர்களுக்கு ஊட்டும் போது, உள உணர்வை கொண்டிருப்பது நலிவுத்தன்மையின் வெளிப்பாடு ஒன்று என்ற பிழையான தகவல் அவர்களுக்கு வழங்கப்படும். இதனால் அவர்கள் தமது உள உணர்வுகளை தமக்குள்ளேயே உள்ளடக்கிக்கொள்ள கூடும். தமது உள உணர்வுகளுக்கும், ஏனையவர்களின் உள உணர்வுகளுக்கும் மதிபபளிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.