ஒருவரின் குணநலன்களை பற்றி தெரிந்துக் கொள்வதற்கு, அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டை வைத்து எளிதில் கூறிவிடலாம்.
கம்மி பியர்ஸ் (GUMMY BEARS)
இந்த மிட்டாயை விரும்புவர்கள், மனதளவில் ஒரு குழந்தையை போல் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் ஒரு நேர்மறை எண்ணம், சமூக சிந்தனை உடையவர்.
லாலி பாப் (LOLLI POP)
லாலிபாப் மிட்டாயை அதிகம் விரும்பி உண்பவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். எந்த ஒரு உறவையும் முதல் ஆளாக தொடங்க விரும்ப மாட்டார்கள்.
ஒருவரை பற்றி முழுவதும் அறிந்து கொள்ள தேவையான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அவர்களுடன் நெருங்கி பழகும் வரை மனதில் உள்ளவற்றை அவரிடம் சொல்ல மாட்டார்கள்.
டார்க் சாக்லேட் (DARK CHOCOLATE)
டார்க் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள், ஒரு யதார்த்தவாதி. இளம் வயதிலேயே முதிர்ந்த அறிவை பெற்றிருப்பார்கள். பெரிய பெரிய பார்டிகளில் கூட மிகவும் நெருக்கமான நபர்களுடன் மட்டும் பழகுவார்கள். இவர்கள் தனித்தன்மை பெற்றவராக இருப்பார்கள்.
எம் & எம்ஸ் (M&M’S)
எம் & எம்ஸ் மிட்டயை விரும்பி சாப்பிடுபவர்கள் துணிச்சலானவர்கள். கவனிக்கத்தக்க தருணங்கள் கொண்ட பயணத்தை விரும்புபவர்கள்.
பல நிறங்களை கொண்ட இந்த சாக்லேட்டை போலவே இவர்களின் குணநலனும் வண்ண மயமாக இருக்கும். அதனால் இவர்களை சுற்றி நண்பர்கள் மற்றும் உறவுகள் சூழ்ந்து கொண்டே இருக்கும்.
பீனட் பட்டர் கப் (BEAN BUTTER CUP)
பீனட் பட்டர் கப் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள் தைரியமானவர், குறிக்கோள் உடையவர் மற்றும் சுதந்திரத்தை விரும்புபவார்கள்.
இவர்கள் திடீரென்று தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விடுவீர்கள். மற்றபடி இவர்கள் நல்ல நண்பராக இருப்பார்கள்.
லிகோரைஸ் (LICORICE)
லிகோரைஸ் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள், கருப்பு வெள்ளை படங்களை விரும்பி பார்ப்பார்கள். விதிகளை மதிப்பவர், நேரம் தவறாமையை கடைபிடிப்பவர்.
இவர்கள் வேலையில் நேர்மை, பண்பு மற்றும் ஒழுக்கம் போன்றவற்றிற்காக தங்களின் நண்பர்கள் நேசிப்பார்கள்.
ஸ்நிகேர்ஸ் (SNICKERS)
ஸ்நிகேர்ஸ் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள் பள்ளிப் பருவத்தில் தடகள போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார்கள். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துபவராக திகழ்வார்கள்.
இவர்கள் குழுவாக இணைந்து பணியாற்றும் திறமை உள்ளவர். மற்றவர்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
கேரமல் (CARAMEL)
கேரமல் சூஸ் சாக்லேட்டை விரும்பி சாப்பிடுபவர்கள், உலகில் பல விடயங்களை கண்டுபிடிக்க விரும்புவார்கள். இவர்களை போன்ற அறிவு கொண்டவர்களுடன் நட்பாக இருந்து அவர்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.