Building a Island in the Ocean சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பூமியும் அதன் தனித்துவமான நிலப்பரப்புகளும் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் உருவாகியுள்ளன.
சில நேரங்களில் டெக்டோனிக் தகடுகளின் இயக்கத்தால் ஏற்படும் பூகம்பங்களால் முழு மலைத்தொடர் உருவாகியுள்ளது. சில நேரங்களில், எரிமலை வெடிப்பு புதிய தீவுகளை உருவாக்கும்.
அதுபோல தற்போது ஏற்பட்ட ஒரு எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட புவியியல் மாற்றத்தால் விஞ்ஞானிகள் மத்திய டோங்கா தீவுகளில் ஒரு ‘குழந்தை’ தீவைக் கண்டுபிடித்துள்ளனர். அது தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஹோம் ரீஃப் பகுதியில் நீருக்கடியில் எரிமலை ஒன்று வெடித்து எரிமலைக்குழம்பு, நீராவி மற்றும் சாம்பலைக் கக்கியதால், இப்பகுதியில் ஒரு தீவு பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.
நாசா எர்த் அப்சர்வேட்டரி வெளியிட்ட அறிக்கையில், செப்டம்பர் 10 அன்று இப்பகுதியில் நீருள் மூழ்கிய எரிமலை ஒன்று வெடித்ததாகக் குறிப்பிட்ட
எரிமலை வெடித்த 11 மணி நேரத்திற்குள்,
புதிய தீவு நீர் மேற்பரப்புக்கு மேலே வடிவம் பெறத் தொடங்கியது நாசாவால் கைப்பற்றப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் மூலம் தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள், தீவின் மதிப்பிடப்பட்ட பரப்பளவு 10 மீட்டர் உயரத்துடன் 4,000 சதுர மீட்டராக வளர்ந்ததாக நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒரு வாரம் கழித்து செப்டம்பர் 20 அன்று, தீவு 24,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
டோங்கா புவியியல் சேவைகளின் கூற்றுப்படி, புதிய தீவின் சரியான இடம் ஹங்கா டோங்கா-ஹுங்கா ஹாபாயின் வடகிழக்கே மற்றும் மொங்காஒனின் வடமேற்கில் அமைந்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பு விமான சேவை, கடல்பயண சேவைகள் எதையும் பாதிக்கவில்லை.
இருப்பினும், மேலும் அறிவிப்பு வரும் வரை அனைத்து கடற்படையினரும், , ஹோம் ரீஃப்பில் இருந்து 4 கிலோமீட்டர்களுக்கு அப்பால் பயணம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நம் கண்களுக்கு முன்னால் ஒரு தீவு உருவாகி வருவதைக் காண்பது மிகவும் கவர்ச்சிகரமானதாக, அதிசயமாக இருந்தாலும், அத்தகைய எரிமலைத் தீவுகள் பெரும்பாலும் குறுகிய ஆயுளைக் கொண்டிருக்கின்றன.
இருப்பினும், ஒரு சில விதிவிலக்குகளும் உள்ளன.
இந்த தீவின் தன்மை காலம் போக போகத் தான் தெரியும். தீவை கவனித்துவரும் ஆராய்ச்சியாளர்கள், எரிமலை இன்னும் வெடித்துக்கொண்டிருப்பதால் தீவு மேலும் வளரக்கூடும் என்று கூறியுள்ளனர்.
kidhours – Building a Island in the Ocean
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.