Boat Accident 100 Persons Missing சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றுக்குள் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதுடன் விபத்துப் பகுதியில் இருந்து 8 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டின் போா்கு பகுதியிலிருந்து கெப்பி மாகாணத்திலுள்ள சந்தைப் பகுதியை நோக்கி நைஜா் ஆற்றின் வழியாக அப்படகு நேற்று முன்தினம்சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான ஆட்களையும், சுமைகளையும் ஏற்றிச் சென்றதால், வேகமான காற்று அடித்தபோது, காற்றைத் தாங்காமல் அப்படகு கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Kidhours – Boat Accident 100 Persons Missing
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.