Thursday, November 21, 2024
Homeகல்விஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி! 90 அடி உயரத்திற்கு அலை எழும்...

ஜப்பானை புரட்டி போட காத்திருக்கும் மிகப் பெரிய சுனாமி! 90 அடி உயரத்திற்கு அலை எழும் என எச்சரிக்கை!!! – biggest tsunami in japan

- Advertisement -

ஐப்பானில் விரைவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று ஐப்பான் நாட்டு அரசின் ஆய்வுக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

ஐப்பான் நாட்டு விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள், சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொண்டதாக, பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் பத்திரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஜப்பானின் வடக்குப் பகுதியில் சுனாமி ஏற்படுவது உறுதி. 9 ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில், 30 மீற்றர் உயரத்திற்கு சுனாமி ஏற்படும். பசுபிக் கடற்கரையை ஒட்டி இந்த பாதிப்பு உணரப்படும்.

- Advertisement -

கடந்த ஏப்ரல் 18-ஆம் திகதி டோக்கியோவுக்கு தென் பகுதியில், பசுபிக் கடலில் இருக்கும் அகாஸ்வாரா தீவுக்கு தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பெரிய அளவில் எங்கும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

இனி ஏற்பட இருக்கும் நிலநடுக்கம் ஜப்பான் டிரஞ்ச் பகுதியில் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் வடக்கு அமெரிக்கா, பசிபிக், யுரேசியன், பிலிப்பைன்ஸ் கண்டங்கள் ஒரே இடத்தில் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன.

யுரேசியன் கண்டத்தின் மீது தெற்கு ஜப்பான் உள்ளது. இதனால், ஜப்பான் எப்போதும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுகிறது.

ஜப்பான் டிரஞ்ச் பகுதிதான் எப்போதும், நிலநடுக்கத்தின் மையமாக இருக்கிறது. 2011 மார்ச் 11-ல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு மட்டும் 15,000-பேர் உயிரிழந்தனர்.

இந்தக் குழுவின் ஆய்வின்படி, ஷிஷிமா டிரஞ்ச் பகுதியில் 9.3 ரிக்டர் அளவில் சுனாமி ஏற்படலாம். அப்போது கடல் அலை 90 அடி உயரத்திற்கு உயரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெரிய அளவில் நிலநடுக்கம் வரும்போது, மக்களை வெளியேற்றுவது மிகவும் கடினம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கணித்தது போல் நிலநடுக்கம் ஏற்பட்டால், புகுஷிமா ஒன்றாம் எண் அணு உலை முழுக்க மூழ்கிவிடும் என்று குறிப்பிட்டுள்ளனர். 2011-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போதும், இந்த உலை மிகவும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.