Best Website for Tamil Kids சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நிலச்சரிவு, பூகம்பம் போன்ற இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை கண்டுபிடிக்க எலிகளை தயார் செய்யும் பணியில் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.
ஒரு விசித்திரமான முயற்சியாக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர் டோனா கீன் அடங்கிய குழு பூகம்பத்தின் போது சிக்கியவர்களை மீட்க எலிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.மீட்புக் குழுக்கள் உயிர் பிழைத்தவர்களுடன் பேசுவதற்காக மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்ட சிறிய பேக் பேக்குகளை அணிந்து பூகம்ப இடிபாடுகளுக்குள் அனுப்புவதற்கு எலிகளுக்குப் அவர் பயிற்சி அளித்து வருகிறார்.
I train these clever creatures to save victims trapped in collapsed buildings after earthquakes. We kit them out with a rat backpack, and train them to trigger a switch when they find a victim & come back for a tasty treat 🐀#herosnotpests #science #weirdjobs #WomenInSTEM pic.twitter.com/728IQv70NX
— Dr Donna Kean (@donnaeilidhkean) May 26, 2022
இதற்காக எலிகளுக்கு பிரத்யேக ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டதும் ஒலி எழுப்ப கூடிய சுவிட்ச்-யை பயன்படுத்த எலிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் மீட்பு குழுவுக்கு பாதிக்கப்பட்டவர் இருக்கும் இடம் துல்லியமாக தெரியவரும். இதுவரை, சுமார் ஏழு எலிகளுக்கு ஒலிகளுக்கு பதிலளிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கு மைக்ரோஃபோனைக் கொண்ட வீட்டில் தயாரிக்கப்பட்ட முன்மாதிரி பேக்பேக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.
kidhours – Best Website for Tamil Kids , Best Website for Tamil Kids news , Tamil Kids News Today
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.