வெண்டைக்காயின் மருத்துவ பலன்கள்..! – The Medical Benefits of Ladies Finger

சர்க்கரை , அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழிவு, வயிற்றுப் புண், பார்வைக் குறைபாடு என சகல நோய்களுக்கும் மருந்தாகிறது வெண்டைக்காய்.
பலரும் கொழகொழப்பு தன்மையால் வெண்டைக்காயை உட்கொள்ள மறுப்பார்கள், ஆனால் அத்தனை மருத்துவ பயன்களும் அதன் கொழகொழப்பு தன்மையிலேயே நிறைந்துள்ளன.
கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலமும், கொலஸ்ட்ராலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அடிக்கடி சளி, இருமல் வருவதை தடுக்கலாம்.
நீரிழிவை கட்டுப்படுத்த எப்படி வெண்டைக்காயை பயன்படுத்த வேண்டும்?
- இரண்டு வெண்டைக்காய் துண்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் இரு முனைகளையும் நீக்கிவிட வேண்டும்.
- முனைகளை நறுக்கியப்பின் அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு திரவம் வரும். அப்போது அதனை கழுவிடாமல், ஒரு டம்ளர் நீரில் அந்த துண்டுகளை போட்டு, இரவில் படுக்கும் முன்பு ஊற வைத்து, மறக்காமல் மூடிவிட வேண்டும்.
- பின் காலையில் எழுந்து, அந்த துண்டுகளை நீக்கி, அந்த நீரை குடிக்க வேண்டும்.
- இதனை தினமும் காலையில் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைந்துவிடும்.
- சொல்லப்போனால் வெண்டைக்காயை வேக வைத்து சாப்பிடுவதை விட, இவ்வாறு சாப்பிடுவது தான், சிறந்த பலனைத் தரும்.
- ஆகவே வெண்டைக்காயை குழம்பு, பொரியல் என்று சாப்பிடுவதை தவிர்த்து, மேற்கூறியவாறு சாப்பிட்டால், நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.