1. பெற்றௌர்கள் தேடிய பணத்தில் வாழ்பவனை விட தன் உழைப்பில் வாழ்பவனே உத்தமன்.
2. பிச்சை ஏற்பவன் மான அவமானங்களை விட்டு விடுகிறன்.
3. கடவுள் என்னனும் மெய்ப்பொருள் ஒன்றே. உயிர்கள் எல்லாம் அதன் வடிவங்களே.
4. மனிதன் தனக்குத்தானே நண்பனாகி விட்டால், உலகம் முழுவதும் நண்பனாகும் பாக்கியம் பெறுகிறான்.
5. பெண்களின் பங்களிப்பு இல்லாமல் வீட்டில் நல்ல வளர்ச்சியோ, மாற்றமோ உண்டாகாது.
6. ஒரு வரது உள்ளத்தில் நேர்மையும், உண்மையும் இருக்கிறதா என்பதை அவரது பேச்சைக்கொண்டே கணித்து விடலாம்.
7. கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.
8. மதிப்புடன் வாழ்ந்த மனிதனுக்கு நேரும் அவமானம் மரணத்தை விடக் கொடுமையானது.
9. மனம் எதை சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் என வேதம் சொல்கிறது. நல்லதை மட்டுமே மனிதன் சிந்திக்க வேண்டும்.
10. எத்தனை தடைகள் குறுக்கிட்டாலும், உள்ளத்தில் நம்பிக்கை மட்டும் இருந்துவிட்டால் ஒருவரின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
11. உங்களின் மனதைக் கட்டுப்படுத்த முயலுங்கள் அல்லது அதை வெல்ல ஆசைகளை விடுங்கள்.
12. நான் என்ற சொல்லக்கு ‘சுயலாபம்’ என்று பெருள். அதை நீக்கி விட்டால் மனித சமுதானம் எல்லையற்ற தெய்வீக நிலையை அடையும்.
13. தீமையில் இருந்து மனதை நல்வழிப்படுத்தும் வழியே கடவுள் வழிபாடு.
14. கல்லில் மட்டும் கடவுள் இருப்பதாக கருத வேண்டாம். ஓரறிவு முதல் ஆறறிவு வரை அனைத்துயிர்களும் கடவுளின் வடிவமே.
15. தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றிலே மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.
16. துன்பம் நேரும் சமயத்தில் அதை கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகிவிடும்.
17. உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வின் ஆதார சக்தியாக இருக்கிறது.
18. அணுவளவும் பிறரை ஏமாற்றுவதில்லை என்னும் மன உறுதி இருந்து விட்டால் மனிதன் கடவுளுக்கு நிகராகி விடுவான்.
19. கால வெள்ளத்தில் வரும் புதிய மாறுதல்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டு வாழப்பழக வேண்டும்.
20. தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடா விட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.
21. எல்லா நன்மைக்கும் தாயாக இருப்பது துணிவு ஒன்ற. கல்வி, செல்வம், வீரம் என எல்லாவற்றைம் துணிவாய் பெற முடியும்.
22. கவலையை வென்றால் மரணத்தை வெல்லலாம். நகரத்திற்கு ஈடான கவலைக்கு இடம் தராதீர்கள்.
23. உள்ளத்ற் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நலுவி விடுவான்.
24. தன்னை விட பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.
25. தெய்வமே துணை என்று இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் கடமையாற்றுவதில் கண்ணாக இருப்பார்.
26.பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்
27. தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்ட தெல்லாம் துலங்கும்.
28. உள்ளத்தை கடவுளுக்கு பலியாக கொடுத்துவிடுங்கள். அதுவே சிறந்த யாகம்
29. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
30. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. உனக்கு வெற்றியே உண்டாகும்
31. அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால் தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.
32. எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலை கற்றுக்கொள்.
33. மனம் உற்சாகமாக இருந்தால் உடல்நிலை தீவிரமடையும். ஊடம்பைத் தீவிரப்படுத்தினால் மனம் புத்துணர்வு பெறும்.
34. அறிவுத்தேடலை நிறுத்திவிடாதே. ஓயாமல் தொழில் செய்து கொண்டிரு. நீ எது செய்தாலும் அதுநன்மையாகவே முடியும்.
35. உண்மையை உயிராக மதியுங்கள். உண்மையான வாக்கே அருள்வாக்கு என்று சொல்லப்படும்.
36. வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவான்.
37. வாழ்வில் நேர்மையைப் பின்பற்றினால், கால்கள் சரியான பாதையில் நடக்கத்தொடங்கிவிடும்.
38. முயற்சியோடு அசைக்க முடியாத நம்பிக்கையும் அவசியம். இதையே நம்பினார் கெடுவதில்லை என்று வேதம் சொல்கிறது.
39. பயம்இ சந்தேகம சோம்பல் முதலிய குணங்களை அடியோடு விட்டுவிடுங்கள்.
40. நீதிபதியின் முன் மனம் அறிந்து பொய் சொல்வது நடைமுறையாகி விட்டது. இது தர்மத்திற்கு விரோதமானது.
41. கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி பயனில்லை. இனி நடக்க இருப்பதை சிந்தித்து செயல்படுபவனே புத்திசாலி.
42. உலகில் அநியாயம் பெருகி விட்டது என்று கருதி யாரும் நியாயத்தை புறக்கனிப்பது நல்லதல்ல.
43. நல்லறிவு குறைவில்லாத செல்வம், மனத்துணிவு மூன்றும் இருந்தால் எல்லா இன்பமும் உண்டாகும்.
44. உள்ளத்தில் அன்பு இல்லாமல் வாழ்வில் இன்பம் உண்டாகாது. அன்பே வாழ்வன் ஆராய்சியாக இருக்கிறது.
45. வீட்டிலும் வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையை பின்பற்றி வாழ வேண்டும்.
46. கல்வி அளிப்தோடு குழந்தைகளின் உடல் நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.
47. பிறருக்கு உதவி செய்வது நல்லது. அதிலும் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவூவது மிகவும் நல்லது.
48. உள்ளத்தை பயத்திற்கு இரையாக்க வேண்டாம். தெய்வத்தை நம்பி உழைப்பில் ஈடுப்படுங்கள்.
49. சென்றதை சிந்திப்பதை விட இனிமேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.
50. மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
51. நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
52. பேச்சி ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.
53. மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.
54. மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.
55. கடமையைச் செய்தால் சோம்பேறித்தனமாக இருப்பவனைக்காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.
56. பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
57. சோம்பல் என்னும் சண்டாலத்தனம் வேண்டாம். சுறுசுறுப்புடனும், நேர்மையாகவும் எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யுங்கள்.
58. உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். அன்பே இன்பத்துக்கான ஊற்றுக்கண்.
59. துன்பம் நேரும் காலத்தில் உறுதி என்னும் கடிவாளத்தால் மனதை இழுத்துப்பிடியுங்கள்.
60. எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
61. அன்பு எந்த குறையும் பொறுக்கும். உண்மையான அன்பு கொண்டவன் யார் மீதும் கோபப்பட மாட்டான்.
62. வைரம் போல உடலை உறுதி கொண்டதாக மாற்று. உடல் வசப்படா விட்டால் உலக வாழ்வு நரகமாகி விடும்.
63. கொள்கை அளவில் அன்பிருந்தால் அது பயனலிக்காது. அதைச்செயலில் வெளிப்படுத்து.
64. உலக இன்பம்நீர்குமிழி போல மறையும் என்று சொல்பவன் சோம்பேறி.
65. மனதில் உறுதி, நம்பிக்கை,உற்சாகம் ஆகிய நற்பண்புகள் நிறைந்திருப்பவன் நோய்க்கு ஆழாக மாட்டான்.
66. சோம்பேறியாக வாழ்வது பெருங்குற்றம். பிறரிடம் கையேந்துபவனே சோம்பலுக்கு இடம் கெதடுப்பவன்.
67. பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம்தான்.
68. நெஞ்சில் கருனை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு யாரும் பாத்திரமாக முடியாது.
69. புதிய முயற்சிகளில் தவறு ஏற்படுவது இயற்கையே.
70. அறிவின் துணையோடு ஓய்வின்றி தொழிலில் பாடுப்பட்டால் எல்லையற்ற இன்பம் உண்டாகும்.
71. திருமணமான பெண்னைக் கணவர் சுதந்திரமுளவளாக நடத்த வேண்டும். அவளின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.
72. எந்த செயலுக்கும் காலம் ஒத்து நின்றால் ஒழிய அது நிறைவேறுவது என்பது சாத்தியமல்ல.
73. உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருத்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
74. அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவது இல்லை என்னும் பூரண நிலை அடைந்துவிட்டால் அவனே கடவுள்.
75. கண்ணைத்திறந்து குழியில் விழுவது போல மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறன்.
76. பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகுதான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
77. கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.
78. மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்க அழகு.
79. அறிவுதான் ராஜா, அதைப் பெறுவதற்கு மனம், ஐம்புலன்கள் அடங்கியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவற்றுக்கு கேடு உண்டாகும்.
80. எரியும் விளக்கு இருந்தாலும் அதைக்காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
81. எல்லா விதமான செல்வங்களும் அறிவே வேராக இருக்கிறது. அறிவுக்கண் திறந்தால் எதையும் சாதிக்கலாம்.
82. அன்பு ஒன்றினால் மட்டுமே உலகத்தின் துயரம் அனைத்தையும் எளிதில் மாற்றி அமைக்க முடியும்.
83. பொருள் படைத்தவன் சமத்துவ எண்ணத்தைப் பெற்றுவிட்டால் உலகமே சீர் பெற்றுவிடும்.
84. வாழ்வில் இனிமை பெற விரும்புவோர் பின்பற்ற வேண்டிய குணங்களில் தலைமையானது பொறுமை.
85. உழைத்து வாழ்வதுதான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக்கண்டால் ஓடி விடும்.
86. அகங்காரம் என்னும் அரசுக்கு ஆளாகி விட்டால் நரகத்துன்பத்தை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.
87. மலர்ந்த முகமும், இனிய சொல்லும் இன்பமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.
88. புகழும் நல்ல அறமும் தவிற மற்ற உல கவிஷயம் அத்தனையும் பொய்யானதே.
89. மனதில் பக்தி இருந்தால் உதவும் மனப்பான்மை உண்டாகும். இல்லாவிட்டால் பக்தி பகல் வேஷமே.
90. கைமாறு கருதாமல் பிறரின் துன்பம் போக்க உதவுங்கள். இதுவேஈகை, அறம், தர்மம், கடமை எனப்படுகிறது.
91. இடைவிடாமல் மனதில் உறுதி செய்யப்படும் தீர்மானம் நிச்சயமாக ஒரு நாள் நிறைவேறும்.
92. தனக்கும் பிறருக்கும் துன்பம் விலைவிப்பது பாவம். பிறருக்கு இன்பம் விலைவிப்பது புண்ணியம்.
93. புத்தியை மீறி உடலுக்கு சக்தி மனதிற்கு இருக்கிறத. மனதை எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
94. பொய்யாக நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்த கூடாது. ஆனால் இப்படிப்பட்டவர்களையே தலையில் துக்கிவைத்து உலகம் கொண்டாடுகிறது.
95. அன்பை விடச் சிறந்தது வேறில்லை. அன்புள்ள அனைவரையும் அரவனைத்து மகிழும்.
96. சோம்பலை புரக்கணியுங்கள். உழைபின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.
97. தெய்வம் என்னும் அறிவுக்கடலில் நம் ஒவ்வருவரும் ஒரு திவலை போல இருக்கிறௌம்.
98. கவலை, பயம், என்னும் இரு நாய்களுக்கு உள்ளத்தை இரையாக்குவது மடத்தனம். ஏப்போதும் மனதில் சந்தோஷம் குடியிருக்கும்.
99. உழைப்பில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை நோய் போன்ற குட்டிப்பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
100. பக்தி பக்குவம் அடையும் போது தான், தெய்வம் கேட்ட வரத்தைக் கொடுக்கும்.
101. மனிதன் தன்னைத்தானே ஆளக் கற்றுக் கொண்டால்இவாழ்வில் உயர்வு அடைவது உறுதி.
102. பெற்ற தாயைக் குழந்தை நம்புவது போல, தெய்வத்தை முழுமையாக நம்புவதே பக்தி.
103. யாருக்கும் எதற்கும் அடிமையாகாதீர்கள் பூரணனான கடவுள் ஒருவருக்கே அடிமையாக வாழுங்கள்.
104. எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைத்துவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.
105. அச்சம் இருக்கும் வரை அறிவாளியாக முடியாது. அச்சமின்மையே அறிவு.
106. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால் வாக்கிலும் இதன் தன்மை வெளிப்படத் தொடங்கும்.
107. வேலையில் ஈடுபபடாமல் மனிதன் காணப்பெழுது கூட வாழ முடியாது. விரும்பாவிட்டாலும் கூட தொழில் செய்வதாக வேண்டும்.
108. உடலை வசப்படுத்தாவிட்டால் உலக வாழ்கையே துன்பமாக மாறி விடும்.
109. எல்லாவிதமான செல்வங்களுக்கும் அறிவுதான் வேர். அறிவை பயன்படுத்தினால் எதிலும் வெல்லாம்.
110. உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுப்படுங்கள்.