Bacteria that eat plastic சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பூமி தோன்றியது முதல் பூமிக்கு எத்தனையோ ஆபத்துகளும் நெருக்கடிகளும் வந்திருக்கின்றன. அவையெல்லாம் தற்காலிகமானது தான். ஒரு நாள் தீர்வு கிடைத்து நிம்மதியாகிவிடும்.
ஆனால் பிளாஸ்டிக் என்று புழக்கத்திற்கு வந்ததோ, அன்று முதல் தொடங்கியது பூமிக்கு நிரந்தர தலைவலி. உலகம் முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகையை விட அதிகமாக குவிகிறது பிளாஸ்டிக் குப்பைகள். இப்போது பூமிக்குள் புதைந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மக்கி சிதையவே பல ஆயிரம் ஆண்டுகள் ஆகுமாம்.
இதனால் கவலையடைந்த விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கிற்கு ஒரு எமனை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசுதான் பிளாஸ்டிக் உண்ணும் பாக்டீரியா. கடந்த சில ஆண்டுகளாக PET போன்ற பொதுவான பிளாஸ்டிக்குகளை அழிக்கும் என்சைம்களை நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
இருப்பினும், இதன் வேகம் குறைவு தான். அதனால் தான் அதிவேக புதிய வகை என்சைம் ஒன்றை இப்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நியூ அட்லஸால் அறிவிக்கப்பட்ட புதிய என்சைம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜப்பானில் முதன்முதலில் அறிமுகமானது.
Kidhours – Bacteria that eat plastic
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.