Awesome place In Earth சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பூமியில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று வியக்க வைக்கும் அளவிற்கு சொர்க்கம் போல காட்சி அளிக்கும் இடம் ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பூமி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுக்க தெரிவித்து வருகின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக வானிலை பாதிக்கப்படுவதாகவும், நீர் நிலைகள் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.
Deer enjoying the clear water of Lake Brienz, Switzerland.. 😊 pic.twitter.com/YkFVvcmAWb
— Buitengebieden (@buitengebieden) October 1, 2022
உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று ஜனாவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
முக்கியமாக காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுக்கவே நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நிலையில்தான் உலகில் இருக்கும் அழகான நீர் நிலை ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. உலகில் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்று ஸ்விட்சர்லாந்து.
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள நீர் நிலை ஒன்றின் வீடியோதான் வேல்யுயாகி உள்ளது. பிரின்ஸ் என்ற ஏரியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது.
இதில் கொம்பு வைத்த மான் வகைகள் தண்ணீர் குடிக்க வருகின்றன.
நிறைய மான்கள் வந்து தண்ணீர் குடிப்பது போல வீடியோவில் உள்ளது. இது பார்க்கவே எதோ சொர்க்கம் போல இருக்கிறது.
படங்களில் சொர்க்கத்தை காட்டும் போது மான்கள் அழகான நீரில் தண்ணீர் கொடுப்பது போல காட்சிகள் இருக்கும். அது போலத்தான் இந்த வீடியோவும் இருக்கிறது
அதிலும் அந்த தண்ணீர் கொஞ்சம் கூட அழுக்கின்றி காணப்படுகிறது. பார்க்க தெளிவாக, கண்ணாடி போல தண்ணீர் உள்ளது.
தண்ணீர் உள்ளே இருப்பதை மேலே இருந்து பார்க்கும் அளவிற்கு அவ்வளவு தெளிவாக தண்ணீர் உள்ளது. பூமியில்தான் இப்படி இரு இடம் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு விசித்திரமாக அந்த இடம் உள்ளது.
இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்
Kidhours – Awesome place In Earth , Awesome place In Earth Trending
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.