காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக் கொல்ல முடிவெடுத்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ பரவி வரும் நிலையில், அந்நாட்டின் தெற்கு பகுதியில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ஏராளமான ஃபெரல் ஒட்டகங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்துச் செல்வதாகவும், இதனால் பொதுமக்களுக்கு போதுமான நீர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஃபெரல் ஓட்டகங்கள் அதிக அளவிலான தண்ணீரை குடிப்பதால் கடுமையான வறட்சி ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டகங்களால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்ததை அடுத்து, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.
தற்போது ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆஸ்திரேலியாவில் கடந்த 3 மாதங்களாக எரிந்து வரும் காட்டுத்தீயால் லட்சக்கணக்கான மரங்கள் மற்றும் வனவிலங்குகள் பலியாகி உள்ளது
kidhours_news
wildlife,wildanimal,animals,cat,elephant,pitbull dog,dogs for sale,dolphin,shark,types of dogs,wolves
deer,tortoise,gorilla,porcupine,pet,rottweiler puppies,veterinarian,camel,cheetah
wild animals,sea lion,shih tzu puppies,kittens,centipede,beagle dog bird,pigeon,love birds
ostrich,hummingbird,african love birds,woodpecker,fly catcher,love birds cage
weaver bird,bird cage,bulbul,sunbird,migratory birds,eclectus parrot,bird feeder,egret