Thursday, November 21, 2024
Homeகல்விபுவியியல்வளிமண்டலம் என்றால் என்ன? #tamil article

வளிமண்டலம் என்றால் என்ன? #tamil article

- Advertisement -

பரந்த இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் காற்று மிக இன்றியமையாதது. புவியைச் சுற்றி எங்கும் பரவியுள்ள வாயுக்களால் ஆன காற்று மண்டலத்தை வளி மண்டலம் என அழைக்கின்றோம். புவியைச் சுற்றிலும் அதன் மேற்பரப்பில் சுமார் 10000 கி.மீ உயரம் வரை வளிமண்டலம் பரவியுள்ளது. இவ்வளிமண்டலம் புவியின் சுழற்சியுடனே சுற்றி வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் நைட்ரஜன் (78.08%), ஆக்ஸிஜன் (20.94%) ஆகிய வாயுக்கள் மிகுதியாகவும், கார்பன்-டை-ஆக்ஸைடு, ஆர்கான், ஒசோன் போன்ற வாயுக்கள் குறைவாகவும் உள்ளன. இத்துடன் புவியை ஒட்டிய வளிமண்டலத்தின் கீழ்பகுதியில் நீராவியும் அமைந்துள்ளது. இந்நீராவி இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. நாம் அன்றாடம் அனுபவித்து உணரக் கூடிய வானிலைக் காரணிகளான வெப்பநிலை, அழுத்தம், காற்று, மற்றும் மழைப் பொழிவில் ஏற்படும் மாற்றங்களுக்கு வளிமண்டலம் முக்கிய காரணமாகிறது. எனவே, வளிமண்டலத்தின் தன்மை, அமைப்பு, வானிலை மற்றும் காலநிலைக் காரணிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.

- Advertisement -
sky_kids_news
sky_kids_news

சூரிய வெப்பத்தில் இருந்தும் ஒளியின் தீவிர தாக்கத்தில் இருந்தும் பூமியை பாதுகாக்கும் ஒரு கவசமாக வளிமண்டலம் இருந்து வருகின்றது. இதில் உள்ள ஓசோன் படலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி எடுத்துக் கொண்டு உலகில் உள்ள உயிரினங்கள் அழியாமல் பாதுகாத்துக் கொள்கின்றது.காற்றழுத்தம் என்பது பூமியின் குறிப்பிட்ட புள்ளியின் மேல் காற்றின் முழு நிறையும் கொடுக்கும் அழுத்தமாக கணிக்கப்படும். ஆனால் உண்மையில் காற்றின் அழுத்தம் மிக குறைவு. சாதாரணமாக ஒரு அறையின் வெப்பநிலையில் ஒரு லீட்டர் காற்றின் எடை சுமார் 1.3 கிராம் ஆகும். இதுவே கடல் மட்டத்தில் ஒரு சதுர சென்ரி மீட்டரில் பல மடங்கு எடை காணப்படும். இதனை வளிமண்டல அழுத்தம் என கூறுகின்றார்கள்.

வளிமண்டலம் வெவ்வேறு வாயுக்களாலும், நீராவியாலும் நிறைந்துள்ளது. பூமிக்கு மேல் 50 கிலோமீட்டர் வரையிலான வளிமண்டலத்தில் சுமார் 78% ஆன நைதரசனும், 21% ஆன ஓட்சிசனும், காபனீரொட்சைட் (0.004%) , மிக குறைந்த அளவுகளில் ஆகன், கரியமில வாயுக்கள், நியோன், கீலியம், மெதேன் போன்ற வாயுக்களும் காணப்படுகின்றது.வளிமண்டலத்தில் 50 கிலோமீட்டருக்கு அப்பால் ஓட்சிசன் , ஓசோன், கீலியம், ஐதரசன் அணுக்களும் காணப்படுகின்றன. பூமியில் இருந்து 64000 கிலோமீட்டர் தூரம் வரை ஐதரசன் அணுக்களே அதிகம் நிறைந்துள்ளது. இதுதவிர ஏறத்தாழ 0.01% ஆன அளவு நீராவி காணப்படுகின்றது. இது வளிமண்டலத்தில் சுமார் 12 கிலோமீட்டர் வரை பரந்துள்ளது.

- Advertisement -

sky_kids_news

- Advertisement -

வளிமண்டலத்தில் நீராவி குறைந்த அளவில் இருந்தாலும் அது முக்கியம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது. இவ்வாறான வளிமண்டலம் பல்வேறு படையமைப்புகளை கொண்டுள்ளது. அவற்றினை அவதானிக்குமிடத்து மாறன் மண்டலம், படை மண்டலம், இடை மண்டலம், வெப்ப மண்டலம் , புற வளிமண்டலம் என பாகுபடுத்தப்படுகின்றது.வளிமண்டலத்துக்கு ஒரு எல்லை கிடையாது.வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாக குறைந்து செல்கின்ற தன்மையினை கொண்டுள்ளது. இது 30 கிலோமீட்டர் வரை 98 சதவீதமான நிறையினை கொண்டுள்ளது. புவிமேற்பரப்பில் இருந்து 60 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள வளிமண்டலமானது கர்மன் கோடு என அழைக்கப்படுகின்றது.

 

*********************************

kidhours-upcoming

covid19_update #kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil#Insurance #Gas#Electricity#Loans#Mortgage#Attorney#Lawyer#Donate#Conference Call
Degree#Credit

 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.