பூமியில் நிலநடுக்கம் ஏற்படுவதைப் போல், முதன்முறையாக செவ்வாய் கிரகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான ஆடியோவை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் கிரகங்களின் வெப்பநிலையை கணக்கிடும் கருவி, சுழற்சி மற்றும் நிலத்தின் செயல்பாடு குறித்தும் கண்டறிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வை இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 6ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில நடுக்கம்-நாசா விண்வெளி மையம்
- Advertisement -
- Advertisement -
- Advertisement -