Thursday, November 21, 2024
Homeகல்விதீப்பற்றி எரியும் அமேசான் காடு.... பரிதவிக்கும் விலங்குகள்! கண்ணீர் வரவழைக்கும் காட்சி

தீப்பற்றி எரியும் அமேசான் காடு…. பரிதவிக்கும் விலங்குகள்! கண்ணீர் வரவழைக்கும் காட்சி

- Advertisement -

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காட்டில் கட்டுக்கடங்காத தீ அணையாமல் எரிந்து கொண்டிருப்பதால் அதை அணைக்க விமானங்களில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

- Advertisement -

உலகளவில் மிகவும் பிரபலமான காடு என்றால் அது அமேசான் காடுகள்தான். இங்கு அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், அரிய வகை விலங்குகள் ஆகியன உள்ளன.

இந்த காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது. பிரேசிலில்தான் அதிகளவில் பரவி உள்ளது.

- Advertisement -

கடந்த சில நாள்களாகவே உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது அமேசான் காட்டுத்தீ. எவ்வளவு பெரிய காட்டுத்தீயிலிருந்தும் மீண்டுவரும் அபார வலிமை படைத்தவை காடுகள்.

- Advertisement -

ஆனால் தற்போது அரசியல் தீயிலும், தனிமனித பேராசை தீயிலும் எரிந்து கொண்டிருக்கும் இந்த காடுகள் மீண்டுவருமா என்ற கேள்விக்குறி அனைவரிடமும் எழுந்துள்ளது.

காட்டில் வாழும் விலங்குகள் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் தவிப்பதும், சில விலங்குகள் இறந்து சிலையாக காட்சியளிப்பது காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துள்ளது.

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.