கல்வி,அறிவை பெறுவதற்கும் வேலைதேடுவதற்கும் என்பது கல்விக்குப் முன்பு கொடுத்த வரை விலக்கணமாகும். ஆனால் தற்காலத்தில் பணம் சம்பாதிப்பதே முக்கிய நோக்கமாகும்.இதுவே இன்றைய மாணவ சமூகத்தின் மூளையில் கட்டாயமாகபதியவைக்கப்படுகிறது. இதனாலேயே பெருமளவான மாணவர்கள் மிகுந்தளவான மன அழுத்ததிற்கு உள்ளாகின்றனர். ஆயினும் சிறுவயதில் வழங்கப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் எதிர்காலத்தில் மாணவர்களை சிறந்த சாதனையாளர்களாக உருவாக்கமுடியும்.ஆக்கப் பொருட்ளை மாணவர்களுக்கு செய்ய பழக்குவதனால் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ளலாம்.கலை என்பது இனத்தின் அடையாளம் நிலை வாழ்வின் எச்சம். கலை ஒரு வெளிப்பாடு உள்ளுணர்வின் சுதந்திரம் உயிர் இனங்களிலிருந்து மனிதனை தனித்து காட்டுவது கலைஆகும்.
நாம் அன்றாடம் வாங்கி பருகி விட்டு எறியும் பிளாஸ்டிக் குளிர்பான போத்தல்களைக் கொண்டும் பல்வேறான ஆக்கப் பொருட்களை மேற்கொள்ளமுடியும்.இவ்வாறே காகித ஆக்கப் பொருட்களை மிகவும் இலகுவாக செய்து கொள்ளமுடியும். அவற்றில் இப்பொழுது நமது வீட்டு கூரையின் மீது செய்து தொங்கவிட கூடிய 3 வகையான அலங்கார பொருள் ஆக்கங்களை எவ்வாறு செய்யலாம் என இங்கு பார்ப்போம்.
01. முதலாவதாகமிகவூம் எளிமையாககாகிதப் பூக்களைகொண்டுசெய்ய கூடியஅலங்காரபொருளைப் பார்ப்போம்
தேவையானபொருட்கள்
நிறகாகிதங்கள்- 10
கத்தரிக்கோல் – 01
வட்டவாரி – 01
பென்சில் – 01
அடி மட்டம் – 01
பசை (binder gum)) – 01
மட்டைகீலம் – 02
துளையிடக் கூடிய ஊசி – 01
தொங்கவிட கூடியபலமான நூல் – 02
நூல் – தேவையானஅளவு
முத்துக்கள் – தேவையானஅளவவு
முதலில் நீங்கள் விரும்பும் நிறகாகிதம் (ஊதா)ஒன்றைஎடுத்துக்கொள்ளவூம். அக் காகிதத்தில் 8 செ.மீ நீள அகல முடைய சதுர துண்டுகளை வெட்டி எடுத்துக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளில் ஒன்றை எடுத்து இரண்டாக மடித்து மீண்டும் அதனை இரண்டாக மடித்து பின்னர் அதனை முக்கோணவடிவில் மடித்துக் கொள்ளவும்.பின்னர் முக்கோணமாக மடித்த அத்துண்டில் அலை வடிவமாக 3 அலைவர கூடியதாய் வரைந்து கொள்ளவும்.
பின்னர் அவ் வரை கோட்டின் வழியே கத்தரிக்கோல் உதவியுடன்அதனை வெட்டிக்கொள்ளவும். வெட்டி எடுத்துக் கொண்ட அத் துண்டின் முனையை சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.அவ்வாறு வெட்டுவதனால் இறுதியில் பூவினை அழகாகவும் இலகுவாக ஒட்டிக்கொள்ள உதவியாயிருக்கும். பின்னர் வெட்டிய துண்டை விரித்துக்கொள்ளவும்.அப்பொழுது வட்டவடிவில் பூ உருவம்போல் ஒன்றுகாட்சியளிக்கும்.இவ்வாறாக மொத்தம் 4 முக்கோண துண்டுகளை வெட்டி விரித்துக் கொள்ளவும். பின்னர் படத்தில் காட்டி உள்ளவாறு முதல் பூவில் ஓர் முக்கோணத் துண்டையும் இரண்டாவது பூவில் இரண்டு முக்கோணத் துண்டுகளையும் மூன்றாவது பூவில் மூன்று முக்கோணத் துண்டுகளையும் நான்காவது பூவில் நான்கு முக்கோணத் துண்டுகளையும் குறித்துக் கொள்ளவும். பின்னர் குறித்து கொண்ட துண்டுகளை மாத்திரம் வெட்டிக்கொள்ளவும்.
முதல் பூவில் வெட்டிய துண்டின் ஓரத்தில் சிறிதளவு பசை பூசிஅதை குழல் வடிவில் ஒட்டிக்கொள்ளவும். மேலும் முதல் பூவின் மற்றைய பகுதியின் முக்கோணத் துண்டில் சிறிதளவு பசை பூசி அதையும் குழல் வடிவில் ஒட்டிக்கொள்ளவும். பின் இரண்டாவது பூவில் வெட்டிய துண்டின் ஓர் முக்கோணத் துண்டில் சிறிதளவு பசை பூசி அதையும் குழல் வடிவில் ஒட்டிக்கொள்ளவும். மேலும் இரண்டாவது பூவின் ஓர் முக்கோணத்துண்டில் சிறிதளவு பசைபூசி அதையும் குழல் வடிவில் ஒட்டிக்கொள்ளவும். பின் மூன்றாவது நான்காவது பூக்களையும் அவற்றில் வெட்டிய துண்டுகளையும் அவ்வாறே குழல் வடிவில் ஒட்டிக் கொள்ளவும். ஒட்டிக் கொண்ட பூக்களின் கீழ் முனைகளை மிகவும் சிறிய அளவாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் அவற்றின் மேல்சிறு அலை வடிவமாக உள்ள இதல்களை பென்சில் அல்லது பேனையின் உதவியுடன் அழகாக சுருட்டிவிடவும்.
அதன் பின் ஓர் முக்கோணத் துண்டுவெட்டிய பூவின் பெரிய துண்டினுள் இரண்டு முக்கோணத் துண்டு வெட்டிய பூவின் பெரிய துண்டினையும் மூன்று முக்கோணத் துண்டு வெட்டிய பூவின் பெரிய துண்டினையும் நான்கு முக்கோணத் துண்டு வெட்டிய பூவின் பெரிய துண்டினையும் பின் நான் குமுக்கோணத் துண்டு வெட்டிய பூவின் மற்றைய துண்டினையும் மூன்று முக்கோணத் துண்டு வெட்டிய பூவின் மற்றைய துண்டினையும் இரண்டு முக்கோணத் துண்டு வெட்டிய பூவின் மற்றைய துண்டினையும் மற்றும் ஓர் முக்கோணத் துண்டு வெட்டிய பூவில் வெட்டிய மற்றைய சிறிய துண்டு மாகவரிசை கிரமமாக ஒன்றன் பின் ஒன்றாக பசை பூசி கழறாதவாறு ஒட்டிக்கொள்ளவும். இப்பொழுது உங்கள் கைகளில் அழகான முழுமையான பெரிய அளவிலான பூ ஒன்று கிடைத்திருக்கும். அப் பூவின் நடுவினுள் ஓர் நிறமுத்து ஒன்றை பசை பூசி ஒட்டிக்கொள்ளவும். இப்பொழுது அப் பூ மிகவும் அழகாக காட்சியளிக்கும்.
மேல் கூறப்பட்டவாறே மேலும் 5 பூக்களை அதே நிறத்திலும் அதே அளவிலும் முத்துக்களை ஒட்டிசெய்து கொள்ளவும்.
அடுத்து மீண்டும் அதே நிற காகிதத் துண்டு ஒன்றை எடுத்து 6 செ.மீ நீள அகலமுடைய சதுர துண்டுகளை வெட்டிக்கொள்ளவும். வெட்டிய துண்டுகளில் ஒன்றை எடுத்து இரண்டாக மடித்து மீண்டும் அதனை இரண்டாக மடித்து பின்னர் அதனை முக்கோணவடிவில் மடித்துக் கொள்ளவும். பின்னர் முக்கோணமாக மடித்த துண்டில் படத்தில் உள்ளவாறு ஓர் அலை வடிவில் கீறிக் கொள்ளவும். பின் வரைகோட்டின் வழியே அதனை வெட்டிக் கொள்ளவும்.வெட்டிய அவ்முக்கோணத்தை விரித்து அப் பூ வடிவ உருவில் ஓர் முக்கோணத்தை வெட்டி அகற்றிக் கொள்ளவும்.எஞ்சிய பூவின் மற்றைய முக்கோணத்தில் சிறிதளவு பசை பூசிஅதனை ஒட்டிக்கொள்ளவும். இவ்வாறாக மொத்தம் 6 சிறிய பூக்களை அதே நிறத்திலும் அதே அளவிலும் வெட்டிக்கொள்ளவும். நீளமானதையல் ஊசி ஒன்றை எடுத்து அதில் நிற நூல் ஒன்றை கோர்க்கவும். இறுதியில் முடிந்து கொள்ளவும். கோர்த்த நிற நூலின் அடியில் ஓர் முத்தை கோர்க்கவும். அது கழறாதவாறு இறுக்கமாக முடிந்து கொள்ளவும். அதன் பின் மேலே கூறியவாறு செய்து வைத்திருந்த சிறிய பூக்களில் ஒன்றை கோர்த்து விடவும். ஆதன் பின் 6 நிற முத்துக்களையும் கோர்க்கவும்.கோர்த்த முத்துக்களை படத்தில் காட்டியவாறு சிறு இடைவெளி விட்டு கழறாதவாறு இறுக்காக ஒட்டிக்கொள்ளவும். ஒட்டிய பின் தையல் ஊசியை கழட்டி விடவும்.தொங்க விடுவதற்கு ஏற்றவாறு சிறிதளவு நூலை விட்டு விடவும். இவ்வாறே அடுத்தடுத்த ஒவ்வொரு முத்தாக குறைத்து மொத்தம் 6 முத்து ஒட்டிய நூல்களை உருவாக்கி கொள்ளவும்.
செய்து கொண்ட பூக்களை ஒட்டிக்கொள்ள கூடியவாறு ஓர் மட்டை நீளத்தை எடுத்து அதனை வட்டமாக ஒட்டிக்கொள்ளவும். ஒட்டிக் கொண்ட வட்டத்தின் உள்ளே அழகு படுத்திக்கொள்ள அதன் உள்ளே ஓர் நிற காகிகக்தை ஒட்டிக்கொள்ளவும். சம அளவு தூர இடைவெளியில் 6 துளைகளை இடவும். முதலில் 6 முத்துக்களுடன் உருவாக்கிய நூலை முதலிலும் 5 முத்துக்களுடன் உருவாக்கிய நூலை இரண்டாவதாகவும் 4 முத்துக்களுடன் உருவாக்கிய நூலை மூன்றாவதாகவும் 3 முத்துக்களுடன் உருவாக்கிய நூலை நான்காவதாகவும் 2 முத்துக்களுடன் உருவாக்கிய நூலை ஜந்தாவதாகவும் முத்துடன் உருவாக்கிய நூலை ஆறாவதாகவும் வட்டத்தில் இட்ட துளைகளில் கட்டிவிடவும்.
பின்னர் இரு சம அளவான வீட்டின் கூரையில் தொங்க விட கூடியதான நூலை எடுத்துக் கொள்ளவும். அந் நூலை முத்துக்களை கட்டியவ வட்டத்தில் சம அளவு தூர இடைவெளியில் 4 துளைகளை இட்டு அந் நூலை கட்டிக்கொள்ளவும். பின்னர் ஆரம்பத்தில் செய்து வைத்த பெரிய 6 பூக்களையும் ஆரம்பத்தில் இட்ட 6 துளைகளுக்குமிடையில் கழறாதவாறு ஒட்டிவிடவும்.
இப்பொழுது கூரையில் தொங்க விடுவதற்கான அழகிய பூ தயாராகி விட்டது.