Monday, January 20, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புவிவசாய நவீனமயமாக்கல் என்றால் என்ன?#Agriculture Modernization

விவசாய நவீனமயமாக்கல் என்றால் என்ன?#Agriculture Modernization

- Advertisement -

நவீனமயமாக்கல் கோட்பாடு, 1950 களில் வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் தொழில்சார் சங்கங்கள் எவ்வாறு உருவானது என்பதை விளக்கியது. சமூகங்கள் மிகவும் கணிசமான அளவிற்கு வளர்ச்சியடைகின்றன, இதன் மூலம் அவை அதிக அளவில் சிக்கலானவையாக இருக்கின்றன. வளர்ச்சி தொழில்நுட்பத்தின் இறக்குமதி மற்றும் பல அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் விளைவாக வரும் என நம்பப்படுகிறது அடிப்படையில் முதன்மையாக சார்ந்துள்ளது.

- Advertisement -

விவசாயமானது ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இடம்பெற்று வருகின்ற ஒரு முதல்தரமான மனித நடவடிக்கைகயாக காணப்படுகின்றது. பெருகிவரும் சனத்தொகையினது உணவுத்தேவையை பூர்த்தி செய்வதற்கு விவசாய உற்பத்திகளை அதிகரிப்பது அவசியமாகும். குறிப்பிட்ட துறையில் மனிதனது அறிவு, திறன் என்பனவற்றினை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்ட இயந்திர தொழில்நுட்ப சாதனங்களின் துணையுடன் குறிப்பிட்ட துறையில் வினைத்திறன் பெறுவது நவீனமயமாக்கம் ஆகும். 1960 இல் ஏற்பட்ட பசுமைப்புரட்சியே இதற்கு மூல காரணமாகும். அதனை பின்வரும் விடயங்கள் மூலம் அவதானிக்கலாம்.

siruvar_seithigal

- Advertisement -

விவசாயத்தில் நவீனமயமாக்கலுக்கான காரணம்.
1.விவசாயத்தில் நவீன மயமாக்கம் எவ்எவ் சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
2.நவீனமயமாக்கத்தால் ஏற்படுகின்ற சூழல் பிரச்சனைகள்
3.நவீனமயமாக்கத்தின் முக்கியத்துவம்
ஆரம்ப காலத்தில் விவசாய நிலப்பரப்பினை அதிகரிப்பதன் மூலம் உற்பத்தி பெருக்கத்தினை அதிகரிக்க முடிந்தது. ஆனால் 1960 களில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, பசுமைப்புரட்சி, தொழிநுட்ப முன்னேற்றம் என்பன காரணமாக இந்த நிலை மாற்றமடைந்தது. அதாவது நிலா விஸ்தரிப்பு கொள்கைக்கு பதிலாக குறைந்தளவு நிலப்பரப்பில் செறிவான பயிர்செய்கையை மேற்கொள்வதன் மூலம் கூடிய விளைச்சலை பெறும் முறை கண்டறியப்பட்டது. எனவே விவசாயத்தில் நவீன மயமாக்கமானது அதிகரித்த உணவுத் தேவையினை பூர்த்தி செய்தல், வளமற்ற நிலத்தினை வளமாக்கல், குறைந்த காலத்தில் அதிகரித்த விளைச்சலினை பெறல், உற்பத்தி திறனை அதிகரித்தல், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை மேற்கொள்ளுதல் அவசியமானதாக காணப்படுகின்றது.

- Advertisement -
ulakamayamathal
www.kidhours.com

விவசாயத்தில் இயந்திரமயமாக்கம் என்பது கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக காணப்படுகின்றது. உழவு இயந்திரமும் அவற்றோடு இணைந்த உபகரணங்களும் ஆரம்பத்தில் விவசாயத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

உழுவதற்கு மட்டுமன்றி அறுவடை செய்தல், நீர் பாய்ச்சுதல், விதை விதைத்தல், சூடு மிதித்தல், தாவரங்களை வேறாக்குதல், கிருமி நாசினிகள் பீடை காவிகள் என்பவற்றை விமானங்களை பயன்படுத்தி தெளித்தல் போன்ற அனைத்து செயற்பாடுகளுக்கும் இன்று இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் விமானத்தின் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் செயற்பாடு நடைபெறுகின்றது.

ulakamayamathal
www.kidhours.com

இயந்திரமயமாக்கம் என்பது விவசாயிகளோடு மட்டுமில்லாது கால்நடைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றது. பண்ணை நாடுகளான நெதர்லாந்து, டென்மார்க், அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள கால்நடைப் பண்ணைகள் எல்லாம் நவீனமயமானதாக காணப்படுகின்றது. பால் கறத்தல் முதல் சகல பண்ணை நடவடிக்கைகளும் இயந்திரங்கள் மூலமே நடைபெறுகின்றது. இதனை விட புதிய வகை கால்நடைகளும் உருவாக்கப்படுகின்றன. செயற்கை முறை இனப்பெருக்கத்தின் மூலம் நல்லின கால்நடைகள் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் அதிகளவு பால், இறைச்சி என்பன உற்பத்தி செய்யப்படுகின்றது. இது மட்டுமன்றி அதிக முட்டையை உற்பத்தி செய்யக்கூடிய கோழி, பறவை இனங்களும் அடைப்பொறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

விவசாய நவீனமயமாக்கல் என்றால் என்ன?#Agriculture Modernization 1
www.kidhours.com

நவீனமயமாக்கம் பயன்படும் மற்றுமொரு சந்தர்ப்பமாக மழைவீழ்ச்சி குறைவடைகின்ற காலப்பகுதியில் செயற்கை மழையை பொழிவித்து பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதாகும். இன்று விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தமையால் மண்ணற்ற பகுதிகளான நீரில் கூட தாவரங்கள் வளர்க்கும் முறை விருத்தியடைந்துள்ளது. அதிக விளைச்சலை பெறும் அதேவேளை களஞ்சியப்படுத்தலிலும் இந்த முறை கையாளப்படுகின்றது. அதாவது இலகுவாக பழுதடைய கூடிய பழவகைகள், காய்கறிகள், கிழங்கு வகைகள் போன்றவற்றை நவீன முறையில் இயந்திரங்களின் உதவியுடன் இரசாயன பொருட்களை பயன்படுத்தி பழுதடையாமல் நீண்ட காலம் பாவிக்க முடிகின்றது.

 

******************************

kidhours_upcoming

#kids songs,#kids health,#siruvar neram,kids songs,siruvar seithigal,siruvar vilaiyattu,siruvar kalvi, world tamil news,tamil first news,tamils,raasi palan,tamil cinema,new tamil movies,vijay sethupathi movies,latest tamil movies,action tamil movie,new tamil movies 2020,new tamil movies released,tamil new film,film tamil,online movies tamil,tamil,english to tamil,english to tamil translation,tamil translation,english to tamil dictionary,tamil typing,hindi to tamil,english to tamil typing
english to tamil sentence translation online,google tamil typing,tamil dictionary,hindi to,tamil translation,tamil to english translator app,sinhala to tamil,tamil to english translation sentences,jothidam,tamil jathagam,tamil jathagam online,daily thanthi jothidam
nadi jothidam,josiyam in tamil,tamil jathagam online free,tamil jothidam online
online josiyam tamil,kulanthai pirappu jothidam in tamil

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.