Tamil Kids News Nuclear Attack சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உக்ரேனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுவாலையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவும் உக்ரேனும் ஒன்றின் மீது ஒன்று குற்றம் சுமத்தியுள்ளன.
எனினும் அங்கிருந்து கதிர்வீச்சுக் கசிவு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. உக்ரேனின் ஸபொரீஸா (Zaporizhzhia) நகரில் இருக்கும் அந்த ஆலையின் மீது உக்ரேன் பீரங்கித் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது.
அந்த அணுவாலை தற்போது ரஷ்யப் படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அணுவாலை தாக்கப்பட்டால் அது அணுக்குண்டைப் பயன்படுத்துவதற்குச் சமமான பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் அந்த ஆலையை ரஷ்யாதான் தாக்கியது என்று உக்ரேன் கூறுகிறது. அத்துடன் போர் தொடங்கியதும் முதல் வாரத்திலேயே அந்த அணுவாலையை ரஷ்யா கைப்பற்றிவிட்டது.
அதேவேளை அந்த அணுவாலையில் விபத்து ஏற்பட்டால் அது உலகத்துக்கு மிகப்பெரிய பேரழிவைக் கொண்டுவரக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.