Tamil Climate News Nepal உலக காலநிலை
இந்தியாவின் அண்டை நாடான நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இருந்து கிழக்கு தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில், திக்தெல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் இன்று காலை 7.58 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதுடன் இது ரிக்டரில் 5.5 ஆக பதிவாகி உள்ளது.
இதனால், நேபாளம், இந்தியா மற்றும் சீனாவில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டு உள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது.
இதனால், சில பகுதிகளில் வீடுகளில் இருந்த மக்கள் அச்சமடைந்து, பாதுகாப்பு தேடி தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
எனினும் இந்த நிலநடுக்கத்தினால், ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.