Tamil Kids News NASA சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்வெளி ஆராய்ச்சியின் தலைமையகமாக போற்றப்பட்டு வரும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் கேலி செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்து நாசா வெளியிட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
விண்வெளி ஆராய்ச்சியின் சாதனையாகவே போற்றப்பட்டு வருகின்றது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, சமையலறையில் உள்ள டைல்ஸ் உடன் ஒப்பிட்டு “நல்ல முயற்சி நாசா” என எலான் மஸ்க் கேலி செய்துள்ளார்.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் எலான் மஸ்க்கும் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் புகைப்படங்கள் குறித்து எலான் மஸ்க் செய்துள்ள விமர்சனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு கொள்வனவு செய்வதாகஅறிவித்து உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய எலான் மஸ்க், அண்மையில் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் நிறுவனம் மஸ்கிற்கு எதிராக வழ்ககுத் தொடர்வதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளது.
kidhours – Tamil Kids News NASA
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.