Tamil Kids News Population சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகின் மொத்த சனத்தொகை இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அளவில் 8 பில்லியன்களை தொடும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.
உலகின் அதி கூடிய மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இந்தியா முன்னிலை பெரும், இதுவரை காலமும் சீனா வகித்து வந்த இடத்தை இந்தியா பிடிக்கும் எனவும் அந்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சனத்தொகை தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1950 ஆம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக கடந்த 2020 ஆம் ஆண்டில் உலக மொத்த சனத்தொகை வளர்ச்சி வீதம் ஒரு வீதத்திலும் குறைவாக காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் உலகின் மொத்த சனத்தொகை எட்டு தசம் ஐந்து பில்லியன்களாக உயர்வடையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டளவில் 9.7 பில்லியன்களாகவும் 2080 ஆம் ஆண்டில் இந்தத் தொகை பத்து தசம் நான்கு பில்லியன்கள் ஆகவும் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.2050 ஆம் ஆண்டளவில் வளர்ச்சி அடையும் சனத்தொகை தொகையின் பெரும்பகுதி கொங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளின் பங்களிப்பாக அமையும் என எதிர் கூறப்பட்டுள்ளது.
2002 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி உலக சனத்தொகை 8 பில்லியங்களாக உயர்வடையும் என்பது மிகத் துல்லியமான தகவல் கிடையாது எனவும் சில வேலைகளில் இந்த எண்ணிக்கையில் சிறு மாற்றம் நிகழக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
kidhours – Tamil Kids News Population
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.