Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யோசெமிட்டி தேசிய பூங்காவில் ஏற்பட்ட பெருந்தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து அருகாமையிலுள்ள சமூகங்கள் மற்றும் முகாம் மைதானங்கள் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு கட்டாய வெளியேற்ற உத்தவுகள் விடப்பட்டுள்ளன, மட்டுமின்றி அருகிலுள்ள பிரதானசாலைகளும் மூடப்பட்டுள்ளன.
இந்த பெருந்தீயால் இதுவரை காயங்கள் எதுவும் பதிவாகவில்லை, ஆனால் மரிபோசா க்ரோவ் என்ற பகுதியை தீப்பிழம்புகள் நெருங்கும் ஆபத்தான நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியானது 500 சீக்வோயாஸ் மரங்களின் தொகுப்பு பகுதியாகும். 2000 ஆண்டுகள் பழமையான இந்த மரங்களை காண சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதும்.
பெரும்பாலும் மின்னல் தாக்கியே இப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் உலகம் மொத்தமுள்ள மரங்களின் எண்ணிக்கையில் சுமார் 20% அழிந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
யோசெமிட்டி தேசிய பூங்காவில் தற்போது விமானங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சீக்வோயாஸ் மரங்களை காப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய பூங்காவின் பெரும்பகுதி திறந்தே இருப்பதாகவும், சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருவதாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.