Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான கலைப் பொக்கிஷங்கள் பல மீட்கப்பட்டுள்ளன. கனேடிய நாடாளுமன்ற வளாகத்தில் இவ்வாறு சுமார் இரண்டு லட்சம் கலை பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
![200 ஆண்டுகள் பழமையான கலைப் பொக்கிஷங்கள் Latest Tamil Kids News # World Best Tamil Kids News 1 Latest Tamil Kids News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/07/Untitled-design-2022-07-11T222423.782.jpg)
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் போது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான கலை பொக்கிஷங்கள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.1800 ஆம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட பொருட்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை, சமையலறை, பாதுகாப்பு ஊழியர்கள் தங்கியிருக்கும் அறைகள், படை வீரர்களின் தங்குமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் இந்தப் பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
படைவீரர்கள் கைதிகள் உள்ளிட்டவர்கள் பயன்படுத்திய தொல்பொருள் மதிப்புடைய பல்வேறு பொருட்கள் இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நாணயங்கள் இராணுவ சீருடைகள், தாயக்கட்டைகள், வைன் போத்தல்கள், மதுபான போத்தல்கள், பாதணிகள், சாப்பாடு தட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.1800 ஆம் ஆண்டுகளிலேயே இந்தப் பகுதியில் கழிவு அகற்றுதல் தொடர்பில் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
kidhours – Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.