Tamil Latest Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
லெபனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தில் திரிபோலி நகரில் உள்ள 3 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் வீடுகள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானதுடன் லர் உள்ளே சிக்கி கொண்டு அபய குரல் எழுப்பினர்.
இது குறித்து உள்ளூர் போலீசார் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தில் குழந்தை ஒன்று பலியானதாக கூறப்படுக் நிலையில், பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டு பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரிய வரவில்லை.
இந்த சம்பவம் குறித்து அறிந்த லெபனான் நாட்டு பிரதமர்(பொறுப்பு) நஜீப் மிகாடி, ( Najib Mikadi) அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் காயமடைந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை வழங்கும்படி உள்ளூர் மருத்துவமனைகளை கேட்டுக்கொண்டதுடன், மீட்பு பணிகளை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
kidhours – Tamil Latest Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.