Recycle in Tamil மீள் சுழற்சி பொது அறிவு – உளச்சார்பு
கழிவுப்பொருள் மேலாண்மை என்பது கழிவுப்பொருட்களை சேகரித்தல், கொண்டுசெல்லுதல், பாதிப்பில்லாத உருவுக்கு மாற்றல், மீள் சுழற்சிக்குள்ளாக்குதல் அல்லது நீக்குதல், மற்றும் கழிவுப்பொருட்களை கண்காணித்தல்[1] ஆகிய செயற்பாடுகளை உள்ளடக்கியதாகும். இந்தச்சொல் பொதுவாக மனித செயல்பாடுகளால் விளையும் கழிவுப் பொருட்களைக் குறிக்கும்.
மேலும் கழிவுப்பொருட்களால் மனிதனின் உடல்நலம், சுற்றுச்சூழல் அல்லது அழகியல் தன்மை ஆகியவற்றில் ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு தடுக்கவோ குறைக்கவோ மேற்கொள்ளப்படுகிறது. வள ஆதாரங்களை கழிவுப்பொருட்களில் இருந்து மீட்பதற்கும் கழிவுப்பொருள் நிருவாகம் தேவை.
கழிவுப்பொருள் நிருவாகத்தில் தின்ம, நீர்ம, வளிம கழிவுகளையும் சில வேளைகளில் கதிரியக்க பொருட்களையும் கையாள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். ஒவ்வொருவகை கழிவுக்கும் அதற்கேற்ற தனிப்பட்ட முறைகளை அதற்கான வல்லுனர்களின் உதவியுடன் கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.
சுற்றுச் சூழலியலாளர்கள் ஏறக்குறைய ஒவ்வொரு ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை துறைசார் நிபுணத்துவர்கள் சூழலியல் ஆர்வலர்கள் விஞ்ஞானிகளுடன் இணைந்து பூமியின் சுற்றுச் சூழல் வெப்பமடைத்தல் என்பது பற்றிய அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். கூடவே இதிலிருந்து நாம் வாழும் பூமிப் பந்தை எவ்வாறு காப்பாற்றலாம் என்ற ஆலோசனைகளையும் வழங்கி விருகின்றனர். தொடர்ந்தாற் போல் கடந்த பல ஆண்டு சுழற்சியில் அறிக்கையில் வெளிவரும் செய்திகள் மகிழ்ச்சி தரும் விடயங்களா அமைவதில்லை.
காரணம் சுற்றுச் சூழல் வெப்பமடைவதை அவர்களால் எதிர்பார்த்த அளவிற்கு மட்டுப்படுத்த முடியவில்லை. இது தொழிற்சாலைகள் அதனைச் சார்ந்து போக்குவரத்து எரிபொருள் பாவனை புதிய பொருட்களை உற்பத்தி செய்தல் அல்லது மீள் சுழற்சி மூலம் பொருட்களை உற்பத்தி செய்தல் மரங்கள் அழித்தல் போன்ற இயற்கைச் சமநிலையை குழப்பும் செய்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக அமைகின்றன.
அது இமையமலை உட்பட வட தென் துருவங்களில் சேகரிப்பில் இருந்த பனிபாளங்கள் உருகுவதில் இருந்து ஆரம்பித்து கடல் நீரின் வெப்பநிலை அதிகரித்தல் தரையின் அளவு குறைதல் என்ற வரை போய் பருவநிலை மாற்றங்களாக அதிக எதிர்பாராத மழை அது சார்ந்த அனர்த்தங்கள் கடல் வாழ், தரை வாழ் உயிரினங்களின் மரணம் என்று போய்கொண்டே இருக்கின்றன.
மனிதன் நவீன விஞ்ஞானத்தை பாவித்து குளிரூட்டி அறைக்குள் ஒழித்துக் கொண்டாலும் உயிரினங்கள் அவ்வாறு செய்ய முடியவில்லை. மனிதர்களும் குளிருட்டி அறைக்குள்ளும் எவ்வளவு பேர் ஒழிக்க முடியும் என்பதுவம் பெரும் கேள்வியாகி நிற்கின்றது.
பண்டங்களின் உற்பத்தியை தேவையிற்கு அதிகமாக உற்பத்தி செய்தல் என்பதை மட்டுப்படுத்தி பொருள்களை அதிகம் மீள்பாவனை செய்யும் வாழ்க்கை முறையிற்குள் அதிகம் செல்வதே சரியானது என்ற முடிவிற்குள் நாம் வர முடியும்.
அப்போ துருப்பிடித்த இரும்பை பாவிப்பதா….? செழும்பு பிடித்த செம்பை வைத்திருப்பதா….?. அழுக்கான உடையை பாவிப்பதா…..? என்ற கேள்விகள் எழுப்பலாம்.
துருப்பிடிக்காமல் இரும்பை பாவிப்பதும் செம்பு செழும்பு ஏற்படாமல் அதனை மினுக்கி பாவிப்பதும் கந்தையானாலும் சகசக்கி கட்டு என்று செயற்படுவதே இதற்கான சரியான வழியாக இருக்க முடியும்.
அப்போது புதிதாக கண்டுபிடிப்பதை எவ்வாறு செய்வது….? செய்யாமல் விடுவதா…? அப்படி யாரும் சொல்லவில்லை. மாறாக அவை அத்தியாவசிய தேவைப் பொருட்களாக இருப்பின் மனித குல வாழ்விற்கு தேவையானவற்றை மட்டுப்படுத்தி நாம் உற்பத்தி செய்ய வேண்டும் மற்றயபடி உபரியாக செய்யத் தேவை இல்லை.
புதிதாக பொருட்களை உருவாக்கி உருமாற்றி செய்து சந்தைக்கு கொண்டு வந்தால்தான் திரும்ப திரும்ப விற்கலாம்.
அப்போதுதான் அதிக இலாபங்களை ஈட்டி பணம் பண்ணலாம் என்ற நுகர்வுக் கலாச்சாராத்தை மக்களிடம் ஏற்படுத்தும் நிறுவனங்கள் செய்யும் இந்த ‘அநியாயங்களை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
எம்மைப் போன்று எழுதுபவர்களால் சிறிய அளவில் விழித்தவர்களை சமாளிக்க உருவானதுதான் மீள் சுழற்சி என்ற திரும்பவும் பழசை அழித்து அதிலிருந்து மீண்டும் பொருள்களை உருவாக்கி மீண்டும் பாவனைக்கு உள்ளாக்குதல்ஆகும்.
இதிலும் மீள் சுழற்சியினால் ஏற்படும் உற்பத்தி புதிதாக செய்வதை போன்று தொழிற்சாலையினால் ஏற்படுதம் கரியமில் வாயுப்பிரச்சனையை உருவாக்கும் வடிவங்கள் நிறங்கள் மாற்றி மாற்றிச் செய்து நுகர்வோரை விட்டில் பூச்சி போல் இழுத்து மீண்டும் மீண்டும் பாவித்ததை எறிந்துவிட்டு பழுதானது…. திருத்ததிப் பாவிக்கக் கூடியவற்றையும் புதிதாக நாகரீகம் புதிய தொழில் நுட்பம் இன்னும் வேகமாக செயற்படும் என்ற பசப்பான வார்த்தைகளினால் விற்பனை செய்யும் விடயங்களே இன்று மேலொங்கி நிற்கின்றன.
நாம் அன்றாடம் பாவிக்கும் உடை இலத்திரனியல் பொருட்கள் என்று எல்லாவற்றிலும் இதனை நாமே அனுபவ ரீதியாக காண முடியும் இந்த பூமியை எமது மூதாயையர்கள் எம்மிடம் நாம் வாழ்வதற்கு பத்திரமாக எம்மிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றனர். தற்போது எமக்கான தலையாய கடமை இதனை நாம் அடுத்த சந்தியினருக்கு வாழ்வதற்கு ஏற்ப அவர்களிடம் பத்திரமாக ஒப்படைத்துச் செய்வதே.
இதற்கு பூமி வெப்பமடைந்து அழியாமல் இருப்பதற்கான வேலைகளை நாம் செய்தாக வேண்டும்.
அதற்கு மீள் பாவனை என்பதற்குள் நாம் அதிகம் தங்கியிருக்க வேண்டும்.
kidhours – Recycle in Tamil , Recycle in Tamil Essay , Recycle in Tamil
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.