Tamil Kids News Today சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் உள்ள மனிடோபா சட்டமன்றம் தலைப்பாகை தினச் சட்டத்தை நிறைவேற்றியது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அன்று கனடா முழுவதும் தலைப்பாகை தினமாகக் கொண்டாடப்படும்.
வளர்ந்து வரும் சமூகத்தில் வேலை, பிழைப்பு என்று மக்கள் தேச எல்லைகள் கடந்து தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழும் நாடுகளில் அவர்களுக்கென தனி சட்டமும், அதன் மூலம் அவர்களுக்கான மரியாதையையும், மதிப்பையும் உலக நாடுகள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றது. இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்று கனடா. தொழில்துறைகளில் மட்டுமல்லாது நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இந்தியர்கள் இருக்கின்றனர். முக்கியமாக பஞ்சாபின் சீக்கியர்களின் எண்ணிக்கை கனடாவில் அதிகம்.
அவர்களின் பாரம்பரியமாக தலைப்பாகை அணியும் பழக்கத்தை முக்கியத்துவப்படுத்த கனடா அரசு ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.தலைப்பாகை என்பது சீக்கிய சமூகத்தின் மிகுந்த நம்பிக்கையின் மதச் சின்னம் மட்டுமல்ல, அவர்களின் மரியாதை மற்றும் கண்ணியத்திற்கும் மிகவும் முக்கியமானது. தலைப்பாகைக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்குவது கனடாவில் சீக்கியர்கள் இன்னும் எதிர்கொள்ளும் இனவெறிக்கு எதிரான விழிப்புணர்வை பரப்பும் என்றும் கூறுகின்றனர்.
தலைப்பாகை நாள் சட்டம் மனிடோபா ஹவுஸில் தனிப்பட்ட உறுப்பினர்கள் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவின் முதல் வாசிப்பு மார்ச் 24, 2022 அன்றும், இரண்டாவது வாசிப்பு ஏப்ரல் 7 அன்றும் மூன்றாவது வாசிப்பு மே 26 அன்றும் மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக ஜூன் 1 அன்று அரச ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதா ஒருமனதாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.
சபையில் உள்ள 57 உறுப்பினர்களில், 35 எம்எல்ஏக்கள் முற்போக்கு கன்சர்வேடிவ் பிரிவையும், 18 என்டிபி மற்றும் 3 லிபரல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.இது கட்சி எல்லைகளைக் கடந்த ஆதரவைப் பெற்றுள்ளது என்று அமைச்சர் ப்ரார் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 13 அல்லது 14 அன்று வரும் பைசாகி அல்லது வைசாகி நாள், கல்சா பந்த் பிறந்ததை நினைவுபடுத்துகிறது. 1699 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பத்தாவது குரு கோவிந்த் சிங், ஆனந்த்பூர் சாஹிப்பில் கல்சா பந்திற்கு அடிக்கல் நாட்டினார். கல்சா பந்த் பிறந்ததைக் கொண்டாடும் ஒரு முக்கிய பண்டிகையாக பைசாகி அனுசரிக்கப்படுகிறது.
குரு கோவிந்த் சிங் கல்சா பந்தை உருவாக்கி, சீக்கிய நம்பிக்கையின் தூணாகத் தலைப்பாகையை உருவாக்கியது, ஏப்ரல் 13, 1699 அன்று; அதனால் தான் ஏப்ரல் 13 ஐ தலைப்பாகை தினமாக அறிவித்துள்ளது.
பர்ரோஸ் எம்.எல்.ஏ., தில்ஜீத் சிங் ப்ரார், மசோதாவை அறிமுகப்படுத்தியபோது, கனடாவின் பன்முகத்தன்மை மற்றும் பன்முக கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக தலைப்பாகையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் நாள் பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
kidhours , Tamil Kids News Today , Tamil Kids News Today update , Tamil Kids News Today special
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.