Tamil News for Kids சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ரஷ்யாவின் நொவாயா கசெட்டா என்ற செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் டிமிட்ரி முராடோவ். இவர் 2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பிலிப்பைன்சின் மரியா ரேசா என்ற ஊடகவியலாளருடன் கூட்டாக பெற்றார். பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை போன்றவற்றுக்கு இவர்கள் ஆற்றிய பங்களிப்பு காரணமாக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவின் முராடோவ் தற்போது நடைபெறும் ரஷ்யா-உக்ரைன் போரில் பாதிப்புக்குள்ளாகும் உக்ரைன் நாட்டின் குழந்தைகளின் நலனுக்காக தனது நோபல் பரிசை ஏலமிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூ யார்க்கை சேர்ந்த நபர் ஒருவர் ரூ.808 கோடிக்கு நோபல் பரிசை ஏலமெடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
இந்த ஏலத்தொகையை போரால் பாதிக்கப்பட்டு புலம் பெயரும் உக்ரைன் குழந்தைகளுக்கு செலவிட உள்ளார் முராடோவ். இந்த போர் தொடர்பாக முராடோவ் வீடியோ பதிவில் கூறியதாவது, போர் நடைபெறுகிறது என்பதை நாம் உலகின் பார்வைக்கு முன்வைக்க வேண்டும், இதில் அதிகம் பாதிக்கும் நபர்களுக்கு நாம் உதவ வேண்டும் என்பதே இதன் நோக்கம் என்றுள்ளார்.
ரஷ்ய அரசின் செயல்பாடுகளை விமர்சனப் பார்வையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் ரஷ்யாவின் ஒரே நாளேடு முராடோவின் நொவாயா கசெட்டா மட்டுமே. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு மேற்கொண்ட பின் செயல்படுவதில்லை. போர் தொடர்பாக விமர்சன செய்திகளை வெளியிட்டால் கடும் சிறை தண்டனை வழங்கப்படும் என ரஷ்யா சட்டம் பிறப்பித்த நிலையில் தனது செயல்பாட்டை நொவாயா கசெட்டா நிறுத்திக்கொண்டது.
இந்த பத்திரிகை 1993ஆம் ஆண்டில் சோவியத் ரஷ்யா உடைந்த பின்னர் தொடங்கப்பட்டது. 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் மட்டும் நொவாயா ஊடகத்தின் புலனாய்வு செய்தியாளர்கள் 6 பேர் தங்களின் செயல்பாடுகளுக்காக கொலை செய்யப்பட்டுள்ளனர். தனது நோபல் பரிசை உயிரிழந்த ஆறு பேருக்கு சமர்ப்பித்திருந்தார் முராடோவ்.
kidhours – Tamil News for Kids ,Tamil News for Kids website in world
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.