Best Tamil Website for School Children , பொது அறிவு – உளச்சார்பு World Blood Doners Day in Tamil
உலக சுகாதார நிறுவனம், ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14-ந் தேதியை, உலக ரத்த தானம் வழங்குவோர் தினமாக கொண்டாடி வருகிறது. 2005-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்த தினம், ‘ஏ’, ‘பி’, ‘ஓ’ (A,B,O) ஆகிய ரத்த குழு அமைப்பைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான, கார்ல் லாண்ட்ஸ்டெய்னெரின் பிறந்த நாள் ஆகும்.
ஒருவரின் உயிரைக் காப்பதற்கு உதவும் வகையில் அளிக்கப்படும் ரத்த தானம் பன்மடங்கு பெருமைக்குரியது என்பதை மறுப்பதற்கில்லை. பசியைப் போக்கும் அன்னதானத்தை, மிகச் சிறந்த தானமாக நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஆனால் அதை விடவும், ஒருவரின் உயிரைக் காப்பதற்கு உதவும் வகையில் அளிக்கப்படும் ரத்த தானம் பன்மடங்கு பெருமைக்குரியது என்பதை மறுப்பதற்கில்லை.
ஒருவருக்கு ரத்தம் எப்போது தேவைப்படும் என்பதை திட்டமிட்டுக் கூற முடியாது. ஒரு சிலருக்கு விபத்தினால் ஏற்பட்ட ரத்த வெளியேற்றத்தின் காரணமாக தேவைப்படலாம். இன்னும் சிலருக்கு போர்க் காயங்களினால், அறுவை சிகிச்சையின் போது, ரத்த மாற்றம் செய்யும் வேளையில் இப்படி பல்வேறு நிலைகளில் ஒவ்வொருவருக்கும் ரத்தம் தேவைப்படும். அதுபோன்ற அவசர கால நேரங்களில் அலைந்து திரிய முடியாது என்பதால்தான், ரத்த தானம் செய்ய முன்வருவோர்களிடம் இருந்து ரத்தம் பெறப்பட்டு, அவை ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் சேமித்து வைக்கப்படுகின்றன
ஒரு நபர் ரத்தத்தை தானமாக பெறும்போது, அவருக்கு செலுத்தப்படும் ரத்தத்தை அளித்தவருக்கு அது பெருமைக்குரிய தருணமாக இருக்கிறது. ரத்ததானம் மூலம் முகம் தெரிந்து பலன் அடைபவர்களைவிட, மறைமுகமாக பலன் அடைபவர்கள்தான் இங்கே அதிகம்.
அப்படி முகம் தெரியாமல், ஒருவருக்கு மறைமுகமாக ரத்த தானம் செய்து உயிர்காக்கும், ரத்த தானம் வழங்குபவர்களை கவுரவிக்கும் விதமாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் ‘உலக ரத்த தானம் வழங்குவோர் தினம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் இந்த நாளைக் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம், ரத்த தானம் வழங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில்தான்.
kidhours – Best Tamil Website for School Children , Best Tamil Website for School Children ,Best Tamil Website for kids
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.