Tamil Short Essay Library சிறுவர் கட்டுரை
சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக நமக்கு வாசிக்க கிடைக்கின்றன .அறிவை தேடும் பலதரப்பட்ட மனிதர்கள் வந்து செல்லும் ஒரு அமைதியான இடமான நூலகத்தை பற்றி நாம் விரிவாக பார்க்கலாம் .ஒவ்வொரு ஊரிலும் கோவில் மற்றும் பள்ளிக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டியது நூலகமே ஆகும் . ஒவ்வொரு கிராமத்திலும் அரசு இலவச நூலகத்தை நிறுவியுள்ளது .
நமக்கு பயனுள்ள புத்தகங்கள் மட்டும் அல்லாது பொழுதுபோக்கு சம்பந்தமான புத்தகங்களும் நூலகங்களில் கிடைக்கிறது. கல்வி அறிவை பெற நகரங்களில் உள்ள புத்தக அங்காடிக்கு சென்று பணத்தை செலவு செய்ய இயலாத கிராமப்புற மாணவர்களுக்கு பொது நூலகம் ஒரு வரப்பிரசாம் ஆகும்.
அறிவை தேடும் ஒவ்வொருவரும் புதிய புதிய புத்தகங்களை வாங்கும் செல்வந்தர்களாக இருப்பதில்லை , வெளிநாடுகளில் மட்டுமே கிடைக்கும் புத்தகத்தை நம்மால் வாங்க முடிவதில்லை.இது போன்ற நேரங்களில் நூலகங்கள் நமக்கு பயன்தரக்கூடியதாக இருக்கின்றன .ஒரு பாடம் அல்லது பிரிவில் இன்னும் எத்தனை புத்தகங்கள் உள்ளன அல்லது புதிதாக என்ன புத்தகம் வந்துள்ளது என்று தெரியாத ஒருவர் நூலகம் சென்று பார்வையிடும்போது அவருக்கு பல புதிய அல்லது முக்கியமான புத்தகம் அவருக்கு கிடைக்கிறது.
அரசு நடத்தும் நூலகம் அல்லது சிறு பொருட்செலவில் அதிக பயன்தர கூடிய கட்டணம் வசூலிக்கும் நூலகளும் இயங்கி வருகின்றன ,அவற்றில் அதிக மதிப்புள்ள புத்தகங்கள் கிடைக்கின்றன.அவற்றில் எண்ணிக்கையில் அதிகமான பிரிவுகளில் புத்தகங்கள் கிடைக்கின்றன.
புத்தர்கள் மட்டுமே ஒரு நூலகத்தின் சிறப்பு அல்ல. அமைதியான வாசிப்புக்கு உகந்த இடமாகவும் ,தொந்தரவுகள் இல்லாத இடமாகவும் நூலகங்கள் இருக்கின்றன .
பள்ளியில் அல்லது கல்லூரியில் படிக்கு ஒரு மாணவனுக்கு ஒரு பகுதி செய்திக்காக ஒரு புத்தகத்தையே வாங்கும் நிலை இல்லை அம்மாணவர் நூலகம் சென்றால் அவருக்கு எண்ணிலடங்கா ஆய்வு நூல்கள் ,ஆய்வு கட்டுரைகள்,தினசரி நாளிதழ்கள் கிடைக்கின்றன.
kidhours – Tamil Short Essay Library
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.