உலக காலநிலை Tamil Climate News
ஸ்பெயினில் வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது.
பொதுவாக மே மாதம் வெப்பநிலை இவ்வளவு அதிகமாக இருக்காது என ஸ்பெயினின் தேசிய வானிலை மையம் ட்விட்டரில் தெரிவித்தது.
10 வட்டாரங்களில் அதிக வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. அதிகாரபூர்வமாக உறுதிசெய்யப்பட்டால், இதுவே ஸ்பெயினில் மே மாதத்தில் பதிவாகிய முதல் வெப்ப அலையாகலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளில், இதுவே மிக வெப்பமான மே மாதம் என தேசிய வானிலை மையத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தால் வெப்ப அலை அடிக்கடி நிழ்வதோடு மற்றும் மிகத் தீவிரமடைந்துள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் சூடான காற்றே ஸ்பெயினின் சூடான காலநிலைக்குக் காரணமாகும்.
மேலும் ஆண்டின் இந்தக் காலப்பகுதியில் சராசரி வெப்பநிலை 15 செல்சியசுக்கு அதிகம் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Climate News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.