Sunday, September 22, 2024
Homeசிறுவர் செய்திகள்இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க Tamil Kids News Sri Lanka # World...

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க Tamil Kids News Sri Lanka # World Best Tamil Kids News

- Advertisement -

amil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அங்கு வன்முறை வெடித்துள்ளது. இலங்கை அரசில் இருந்து ராஜபக்சேக்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் தன்னெழுச்சி போராட்டங்கள் வன்முறையாக மாறி 8 பேர் பலியானதுடன், 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதனிடையே பிரதமர் பதவியில் இருந்து கடந்த திங்களன்று மகிந்த ராஜபக்சே அழுத்தம் காரணமாக ராஜினாமா செய்தார். ராஜபக்சேவின் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொருக்கி தீக்கிரையாக்கப்பட்டன.

- Advertisement -

இதனிடையே உயிருக்கு அஞ்சி முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் இலங்கை திரிகோணமலை பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

- Advertisement -
Tamil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Sri Lanka சிறுவர்களுக்கான உலக செய்திகள்

போராட்டங்கள் காரணமாக இலங்கையில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது, அதே போல பெட்ரோல், டீசல் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சக பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபடுவோரை சுட்டுத் தள்ள இலங்கை அரசு அதிரடியாக உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

இதனிடையே இலங்கையில் புதிய பிரதமரை தேர்வு செய்யும் பணியில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டிருந்த நிலையில், புதிய அரசு அமைப்பது தொடர்பாக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை அவர் அழைத்துப் பேசி வந்தார்.

இந்த நிலையில் அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவை இலங்கையின் பிரதமராக அதிபர் கோத்தபய ராஜபக்சே தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை பதவியேற்றார். இதைத்தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பொறுப்பை பெற்றுகொண்டார் ரணில் விக்கிரமசிங்க.

இதனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1993 முதல் இலங்கையின் பிரதமராக ஏற்கனவே 5 முறை பிரதமர் பதவி வகித்தவர் ரணில் விக்கிரமசிங்க (73). இலங்கை அரசில் பழுத்த அனுபவம் கொண்டவர்.

 

kidhours – Tamil Kids News Sri Lanka , Tamil Kids News Sri Lanka update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.