Tamil Children News Indonesia சிறுவர்களுக்கான உலக செய்திகள்
இந்தோனேசியாவில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் நீர்ச்சறுக்கு பாதியாக உடைந்ததால் குழந்தைகள் 30 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஜாவாவின் சுரபயா நகரில் உள்ள கெஞ்சரன் பூங்காவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பொழுதுபோக்கு பூங்காவில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது நீர்ச்சறுக்கு சரிந்து கீழே விழுந்தனர்.
நீரில் சறுக்கில் சறுகி விளையாட பயணிகள் காத்திருந்த நிலையில், திடீரென சறுக்கு உடைந்து 30 மீட்டர் உயரத்தில் இருந்து பயணிகள் கீழே வீழுந்ததில் 16 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
8 பேருக்கு மேல் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் பயணிகளின் பாரம் தாங்காமல் நீர் சறுக்கு உடைந்து இருக்கக் கூடும் என பூங்கா நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்கான செலவை பொழுதுபோக்கு பூங்கா நிர்வாகம் வழங்கும் என்று சுரபயா மேயர் கூறினார்.
அதிகாரிகள் பொழுதுபோக்கு பூங்காவை மூடிவிட்டு, சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அப்பகுதியில் உள்ள மற்ற பூங்காக்கள் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.