Friday, September 20, 2024
Homeதிருக்குறள்திருக்குறள் கூறும் மழை Thirukkural Koorum Malai # Best Tamil Thirukural...

திருக்குறள் கூறும் மழை Thirukkural Koorum Malai # Best Tamil Thirukural Essay

- Advertisement -

Thirukkural Koorum Malai திருக்குறளின் சிறப்புகள்

- Advertisement -

திருக்குறள் கூறும் மழை

இயற்கைச் சக்திகளில் முக்கியமான ஞாயிற்றின் சிறப்பைக் குறிப்பிடாமல் மழையின் வான் சிறப்பைக் கூறியதும் வள்ளுவர் நடைமுறை வாழ்க்கைக்குக் (Practical Life) கொடுத்த முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இயற்கை சக்திகளில் (சூரியன்) ஞாயிறே முக்கியமானது; சக்தி நிறைந்தது. மழைக்கும் ஒரு காரணமானது. மேலும், சூரியன் திட்டமிட்டு-மாறாமல் செயல்படுவது. ஞாயிறு பொய்த்து யாரும் இதுவரை துன்பப்படவில்லை. ஆனால் மழை எப்போது பெய்யும்; எவ்வளவு பெய்யும் என்று முன்னரே நிர்ணயிக்கமுடியாது.

- Advertisement -

மேலும், மழை பெய்தும் (வெள்ளம் ஏற்பட்டும்)- பெய்யாமலும் கெடுக்கும் தன்மை உடையது. அதனால்தான் இயற்கைச் சக்திகளில் மழையைத் தேர்ந்தெடுத்து இரண்டாவது அதிகாரத்தில் அதன் சிறப்பைப் பாராட்டுகிறார்

- Advertisement -

வான் விண்ணைக் குறிக்கும்; விண்ணில் நிலவும் மேகத்தைக் குறித்து மேகத்தின் வழி பெய்யும் மழையின் பெருமையை வான் சிறப்பு பேசுகிறது. இவ்வதிகாரத்து முதல் இரண்டு பாடல்களும் உணவும் நீரும் வழங்கும் மழையின் வள்ளன்மை கூறும்; மற்ற பாடல்கள் அனைத்தும் மழை இன்மையால் உண்டாகும் துன்பங்கள் சொல்லப்பட்டன. முன்றாம் பாட்டில் பசிக் கொடுமையும், நான்காம் ஆறாம் பாட்டில் விளைச்சல் பாதிப்பும், ஐந்தாம் பாட்டில் மழையின் பேராற்றலும், ஏழில் கடலாக்கம் குன்றுவதும், எட்டு ஒன்பதில் ஆன்மீக உணர்வு குறைவதும் மனிதப் பண்புகள் மறைவதும், பத்தில் ஒழுக்கம் அமையாமையும் சொல்லப்பட்டுள்ளன.

வான் சிறப்பு அதிகாரம் தவிர்த்து வேறு பல இடங்களிலும் மழையை முன்நிறுத்திப் பாடப்பட்ட குறட்பாக்கள் உள்ளன. மழை வள்ளுவரின் உள்ளத்தை மிகவும் கவர்ந்திருக்கின்றது என்பார் மு வரதராசன் (மு வ). ‘வள்ளுவர் பலமுறை உவமையாக எடுத்தாண்டிருப்பது மழையே ஆகும். ஒப்புரவாளரின் கைம்மாறு வேண்டாத கடப்பாட்டை எண்ணும்போது ‘மழைக்கு உலகம் என்ன கைம்மாறு செய்யமுடியும்? ‘(ஒப்புரவறிதல், 211) என்று நினைந்து வியக்கின்றார்.

Thirukkural Koorum Malai
Thirukkural Koorum Malai

அறநெறி தவறாமல் ஆளும் தலைவனுடைய செங்கோலை நோக்கிக் குடிமக்கள் வாழ்வார்கள் என்று செங்கோன்மை கூறும்போது உலகமெல்லாம் மழையை நோக்கி வாழும் சிறப்பை (செங்கோன்மை 542) உவமையாகக் கூறுகின்றார். ஆட்சித் தலைவன் அருள் அற்றவனாக உள்ள காரணத்தால் குடிமக்கள் துன்புறுவதை எடுத்துரைக்கும்போதும், மழைத்துளி காணாமல் உலகம் வருந்தும் நிலையைக் கூறி (கொடுங்கோன்மை 557) விளக்குகின்றார்.

பிறர்க்கு உதவியாக வாழும் நல்ல செல்வருக்கு நேரும் வறுமை மழையின் வறட்சி போன்றது (நன்றியில் செல்வம் 1010) என்று கூறுகின்றார். காதல் கொண்ட மகளிர்க்குப் பிரிந்து மீண்டும் வந்த காதலர் செய்யும் தலையளியைக் காதலி நினைக்கும்போது, உயிர் வாழும் மக்களுக்கு மழை பயன் பெருகப் பொழிதலை நினைந்து உருகச் செய்கின்றார் (தனிப்படர்மிகுதி 1192) நாட்டில் நல்ல ஆட்சி உள்ளபோது மழை பொழிந்து உதவும் (செங்கோன்மை 545) என்றும் ஆட்சி முறை தவறினால் மழை உதவாது (கொடுங்கோன்மை 559) என்றும் நம்பும் நம்பிக்கையும் திருவள்ளுவர்க்கு உண்டு’ என்று குறளில் மழை ஆளப்பட்ட இடங்களை மு வ காட்டுவார்.

‘இயற்கையே இறைவன்’ என்பதை வள்ளுவர் நம்புபவர். மழை இயற்கையின் குறியீடாக அமைந்து இறையின் பருப் பொருளாகத் தோற்றம் அளிக்கிறது. இயற்கையில் அமைந்துள்ள பலவற்றிலும் சிறந்த மழையைப் போற்றுவது வான் சிறப்பு.

உலகில் பல இடங்களில் உயிர் ஊற்றுகள் (Life Springs) இருக்கின்றன. உயிர் நதிகளும் (Perennial Rivers) உள்ளன. இவற்றில் ஆண்டு முழுவதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் உயிர் ஆறு என்று சொல்லத்தக்கது பொதிகையில் தோன்றும் தாமிரபரணி (பொருநை) ஒன்றுதான். மற்றப்படி, இங்குள்ள ஆறுகள் பெரும்பாலும் பருவ மழையையும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் ஆற்றுநீரையும் நம்பி உள்ளவையாம். இதனாலேயே நாம் வான்நோக்கி வாழும் குடியாக உள்ளோம்.

நீர் வற்றிய ஆறுகளையும், ஆற்று மணல் மேடுகளையும், மழையின்றி உயிரினங்களும், செடி, கொடிகளும் வாடி, வதங்கிய காட்சிகளைப் பண்டைத் தமிழ்ச் செய்யுட்களும் காட்டுகின்றன.
மழை சார்ந்த சமுதாயத்தில் பொருள் வாழ்க்கை ஒரு சூதாட்டம் ஆகிவிடுகிறது – மழை பெய்தால் வளம்; மழை பொய்த்தால் வறட்சி, வறுமை, துன்பக்காட்சிகள். இவை இங்கு தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதை வரலாறு சொல்லும். மழையின் பெருமையையும் இன்றியமையாமையையும் நாம் நன்கு உணர்ந்தவர்களே.

மழையைத் தெய்வமாக, மாரியம்மன் எனப் பெயரிட்டு (மாரி என்பதற்கு மழை என்பது பொருள்), ஊர்தோறும் கோயில்வைத்து வழிபடுகிறோம்.
எனவேதான் மழையின் தேவையையும் அதைவிட மழையின்மை பற்றியும் வான் சிறப்பு அதிகாரம் விரிவாக ஆய்கிறது.

வடக்கே வேங்கடத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட தமிழ்நாடு வெப்பப் பகுதியில் அமைந்துள்ளது. மழை மறைவுப் பகுதியாய்த் திகழ்கின்றதால் தமிழகம் நீர்த்தேவைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மண்ணாகும். மழைநீரை நல்ல முறையில் சேமித்துப் பயன்பெறவேண்டும் என்ற செய்தியும் இவ்வதிகாரத்தின்கண் உள்ளது என்பது அறியப்படவேண்டும்.

வெட்டவெளியிலிருந்து பூமி தோன்றியதால் அதுவும் அழிவில்லாதது என்று உணரப்படும்.

1.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

துப்பாதவருக்கு துப்பும் பொருளையும் உருவாக்கி துப்புவதுபோல் தூவுவதே மழை.

 

2. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி.

நீரால் நிறைந்த இந்த உலகத்தில், விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.

 

3. ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால்.

புயல் என்று அழிக்கும் வெள்ளப்பெருக்கு தனது தன்மையை இழந்தால், உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.

 

4.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

அழிப்பதுவும் அழிந்தவர்களை வளம் செய்வதுவும் என எல்லாம் செய்வதே மழை.

 

5. விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது.

சிறு துளியாக மழை இல்லாமல் போனால் புல்லும் முளைக்காமல் போகும்.

 

6. நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின்.

பெரிய கடலும் தனது நீர்மையை இழக்கும்; மேகமாக தனது நீரை தரவில்லை என்றால்…

 

7. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

சிறப்பான பூசனைகள் செல்லாது; வரியார்க்கும் வானோர்க்கும் வானம் வழங்கவில்லை என்றால்…

 

8 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின்.

அற்புத உலகத்தில் தானம், தவம் இரண்டும் இருக்காது; வானம் வழங்கவில்லை எனில்…

 

9 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு.

நீர் இல்லை என்றால், உலகம் இல்லை; யாருக்கும் வான் இல்லையேல், ஒழுக்கம் இல்லை.
ர் இல்லை என்றால் உயிர்களால் ஆன பூமி (உலகம்) இல்லை, வெட்டவெளி இல்லை என்றால் உயிர்களுக்கு ஒழுக்கம் இல்லை.

 

kidhours – Thirukkural Koorum Malai, Thirukkural Koorum Malai katturai , Thirukkural Koorum Malai kalam

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.