பெற்றோர் ஒரு செயலில் திறன் மிக்க குடும்பமாக இருக்க வேண்டுமென்ற முயற்சியைக் கண்டறிவது மிகவும் கடினமானதாக இருக்கலாம், ஆனால் உடல்ரீதியான செயல்பாடு ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய அங்கமாகும். ஒரு தாயின் போரட்டம் உங்களுக்கு தெரியும் இரவு வேலைகள் தொடக்கம் மறுநாள் காலை வரை பிள்ளைகளின் பாடசாலை நடவடிக்கைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையும் பராமரித்து கொள்வது இவை பொதுவாக இருப்பினும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தக்கவைக்க குழந்தைகளுக்கு குறைந்தது அறுபது நிமிடங்கள் உடல் செயல்பாடு தேவைப்படுகிறது. நான் ஒரு சுறுசுறுப்பான குடும்பத்தைச் சம்பாதிக்க 10 எளிய வழிகளை இங்கு காணலாம்.
1.ஒரு நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டும்
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சுறுசுறுப்பான முன்மாதிரியாக இருக்க முயற்சிக்க வேண்டும் உங்கள் சொந்த நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துவது ஒரு செயலற்ற குடும்பத்தை ஊக்குவிப்பதற்கான முக்கியமான வழி முறை ஆகும். முதலில் உங்கள் கைகளிலிருந்து தொலைபேசியை வைத்துக் கொள்ளவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது அவர்களின் கைகளை பிடித்து செல்லுங்கள், சிரார்களுடன் அதிக நேரம் வெளிப்புர செயற்பாடுகளில் குடும்பத்துடனும் இணைந்து செல்லுங்கள்.
2.வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளில் சிறுவர்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்
வீட்டில் செய்கின்ற அனைத்து வேலைகளில் சிறுவர் மற்றும் குடும்ப அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளுங்கள் ஆடிப் பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது என்பர் அதனைப் போல் வீட்டில் நிகழ்கின்ற ஒவ்வொரு வேலைகளிலும் சந்தோசத்துடன் அனைவராலும் விரும்பப்படுகின்ற வகையில் செய்யுங்கள்.
உதாரணமாக .வீடு கழுவுதல்,பூந்தோட்டம் அமைத்தல்,படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகளை துவைத்தல்
3.எப்போதும் எளிமையானவர்களாக இருங்கள்
எப்பொழுதும் எளிமையனவர்களாக இருங்கள் அதாவது அலுவலக மன நிலையை புறந்தள்ளி கோபம்,கடும் பேச்சு என்பனவற்றை குறைக்க வேண்டும் குறிப்பாக சிறுவர் மீது அதிக அன்பு காட்டுங்கள்
- சிறுவர்களை காரில் இருந்துகொண்டு பாடசாலைக்கு முன்னல் விடாமல் இறங்கி சென்று பாடசலையினுள் விட்டு விடுங்கள்
- சிறுவர் முதல் பெரியவர் வரை படிப்படியான ஒவ்வொரு வளர்ச்சி காட்டத்திலும் அந்த கட்டத்தினுள் இருந்து ஒவ்வோரு செயற்பாட்டயும் செயற்படுத்த வேண்டும்
- காலையில் எழும்பும் சிறுவர்களுடன் கட்டிலிலே சண்டையிட்டு விளையாடுதல்
- தொலைக்காட்சியில் அல்லது வானொலியில் பாடல்களை கேட்டு சிறுவர்களுடனே விட்டினுள் ஆடுதல்.
- அளவான இனிப்பு வகைகளை அனைவருடனும் இணைந்து சிரித்து மகிழ்ந்து உண்ணுதல் வேண்டும்.
4.வீட்டுனுள் விளையாட்டுக்களை விளையாடுதல்
வெளிப் பிரதேசங்களுக்கு செல்ல முடியாவிட்டலும் வீட்டினுள்ளே சிறிய விளையாட்டுக்களை விளையாட முடியும் அதன்போது நகைச்சுவைகளை சொல்லி விளையாட வேண்டும் .
உதாரணமாக -கரம்,செஸ்போட்,டாம்,
5.சிறுவா் விளையாட்டுக்களில் இணைந்து விளையாடுதல்
விட்டில் குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து சிரார்களைப் போல் அதே இசைவக்கத்துடன் விளையாட்டுக்களை விளையாட வேண்டும் உதாரணமக கண்ணாம் பூச்சி,கள்ளன் பொலிஸ்,கதை சொல்லுதல்,பாட்டு படித்தல், போன்ற விளையாட்டுக்களை குறிப்பிடலாம்.
6.சிறிய உல்லசப் பயணங்களுக்கு செல்லுதல்
வீட்டினுள்ளேயே இருக்கும் சிறுவர்களையும் எனைய குடும்ப அங்கத்தவர்களையும் அந்த சுற்றத்தை விட்டு வெளியே அழைத்து சென்றாலே குடும்பத்தில் உள்ள பாதிப்பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று உலகளாவிய மனோ தத்துவ நிபுணர்கள் அறிக்கையிடுகின்றனர்.
அந்த வகையில் தவரவியல் பூங்கா , விலங்குகள் சரணாலயம் ,அழகான வனப்பகுதி ,நீர்தேக்கங்கள்,என்பன அழகிய தோற்றத்தில் காணப்படும் பிரதேசங்களை அழைத்து சென்று சந்தோசமாக விளையாடுங்கள் அந்த நேரங்களில் சிறிய சுவையன உணவுகளை பகிர்ந்து உண்ணுங்கள் அவ்வேளைகளில் மிகவும் சிந்திக்கதக்க சிரித்து மகிழக்கூடிய கதைகளை சொல்லுங்கள்.
7.மின்னனு திரைகளின் பயன்பாட்டை குறைத்தல்
அதிகளவாக தொலைக்காட்சி ,வீடியோ ,மொபயில் போன் என்பனவற்றின் பயன்பாட்டை குறைத்தல் வேண்டும் அத்துடன் தொடர் மழை காலங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலை காலங்களில் வீட்டினுள் தொடர்ந்து இருக்கின்ற சிறுவர்களுக்கு பயனுள்ளதான வீடியோ கேம் விளையாட்டுக்களை விளையாடுவதற்கு அனுமதி வழங்குங்கள்,இவ்வாறான கட்டுப்பாடுகளினால் உடல் நோய் தக்கங்கள் குறைந்து சிறந்த பயனுள்ள பொழுது போக்குகளை நாடிசெல்ல முடியும்
8.கிடைக்கப்பெருகின்ற சிறியளவிலான வளங்களையும் பயன்படுத்துதல்
சிறிய அளவு வளங்கள் கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்தி பயன் பெறுதல் வேண்டும் உதாரணமாக வீட்டில் தொலைபேசி இருந்தலே போதும் உலகத்தையே கையினுள் கொண்டு வரலாம் அந்த வகையில் ஸ்மார்ட் போன் இருந்தால் அதனுடாகவே வீட்டில் இருக்கின்றவர்கள் தொடர்பான மருத்துவ குறிப்புக்கள் மற்றும் சிறுவர்களுக்கான கல்வி கற்றலுக்கான தேவைகளை தேடிப்பெற்றுக்கொள்ள முடியும்.
அது மட்டுமல்லாது குடும்பத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய விருப்பங்களை அறிந்து கிடைக்கபெருகின்ற வளங்கள் மற்றும் பயன்களை சமமாக பங்கீடு செய்து வழங்க வேண்டும் அதன் மூலம் அனைவரும் ஒன்றினந்து செயற்பட வாய்ப்புக்கள் எற்படும். தற்காலத்தில் குடும்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது தொலைபேசிகளும் ஒரு காரணமகும்
9.தகுந்த ஆலோசனைகளை வழங்கல்
ஆண் பெண்,சிறுவர் பெரியவர், இளவயதுடையவர்,என்ற நிலையய் உணர்ந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வ்ழங்க வேண்டும் அதுவும் அவர் அவர்களுக்கு பிடித்தமான விடயங்களை கொண்டே அவ்வாரான கருத்துக்களை அறிவுருத்த முடியும். அத்துடன் அசையான வார்த்தைகளை கொண்டு அவர்களை அழைத்தல் மற்றும் சிறிய அளவான வெற்றிகளையும் வெற்றி கொண்டாட்டங்களாக செயற்படுத்துதல் அவர்களுக்கன பரிசு பொருள்களை வழங்குதல் என்பன எந்த வயதுடயவர்களாக இருந்தலும் மிகவும் சந்தோசமடைவார்கள் அத்துடன் அவர்களின் செயற்றிரன் வளர்ச்சியடந்ததாகவே காணப்படுகின்றது. இவை பாரிய அளவான வெற்றிகளுக்கு அவர்களை இட்டு செல்லும்.
10.அதிகளவான மகிழ்ச்சி
எல்லை அற்ற மகிழ்ச்சியைத்தான் அனைவரும் விரும்புவார்கள் அதே போன்று ஒவ்வொரு வருடமும் அல்லது மாதத்திற்கு ஒரு தடவை குடும்பத்தில் உள்ள அனைவரும் எதிர்பாத்திருக்கும் ஒரு சந்தோசமான தருணத்தை உருவாக்குதல் வேண்டும் உதாரணமாக சொந்த மாவட்டத்தையோ,தங்கள் சொந்த பிரதேசங்களையோ அல்லது நாட்டை விட்டோ விடுமுறை காலங்களில் சென்று புதிய சந்தோசமான அனுபவங்களை பெற்றுக்கொள்வது மிக மிக சிறந்த செயற்பாடாக கொள்ளப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலம் ஒவ்வொரு பெற்றோறும் தத்தமது குடும்ப ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ளலாம் இவ்வாரு சமுதாயமும் குடும்ப ஆரோக்கிய வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் அதிகமாக சிறுவர்களுக்கு கல்வியை திணிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் அவர்கள் எந்த துறையில் ஆர்வமும் விருப்பமும் கொள்கிறார்களோ அந்தந்த துறையிலே அவர்களை வளர விடுங்கள் அப்பொழுதுதான் சிறுவர்கள் சிறுவயதிலிந்தே புத்தக்க சிந்தனை உடயவர்களாக முன்னேறி செல்வார்கள் என தற்கால உலக அறிவியல் ஆய்வறிக்கைகள் நியாயப்படுத்துகின்றன என்பது உண்மையே எனக் கூறமுடியும்