France Visa in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரான்ஸ் நாடு விசா வழங்குவதில் ஒப்பீட்டளவில் தாராளமான ஒரு நாடுதான்.
ஆனாலும், பிரான்ஸ் நாட்டு விசா பெறுவது எளிதான ஒரு விடயமல்ல.
பிரான்சில் எத்தனை வகை விசாக்கள் உள்ளன? அவற்றைப் பெறுவது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
யாருக்கு விசா தேவை? நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத ஒருவராக இருந்தால், 90 நாட்கள் விதி என்ற விதி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியா முதலான நாடுகள் இந்த விதியால் பயன்பெறலாம். இந்த விதி 180 நாட்களுக்கு ஒருமுறை 90 நாட்கள் நீங்கள் பிரான்சில் செலவிட அனுமதிக்கிறது.
நீங்கள் ஒரு பிரித்தானியராக இருந்தால், பிரெக்சிட் காரணமாக நீங்களும் அமெரிக்கர்கள், கனேடியர்கள் மற்றும் அவுஸ்திரேலியர்கள் போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தார் அல்லாதவர்களாகத்தான் கருதப்படுவீர்கள்.
விசா தேவைப்பட்டால் என்ன செய்வது?
முதலில், உங்களுக்கு என்ன வகை விசா தேவை என்பதை முடிவு செய்யவேண்டும். ஏனென்றால், பிரான்ஸ் பல வகையான விசாக்களை வழங்குகிறது.
அவற்றிற்குத் தேவைப்படும் ஆவணங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும்.
விசா பெறுவதற்கான அடிப்படை செயல்முறை ஒன்றுதான்.
ஒன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும், தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவேண்டும், கட்டணம் செலுத்தவேண்டும், உங்கள் நாட்டில் நடைபெறும் நேர்காணல் ஒன்றில் பங்கேற்கவேண்டும்.
முக்கிய விடயம், நீங்கள் பிரான்ஸ் புறப்படுவதற்கு முன், நீங்கள் உங்கள் சொந்த நாட்டிலிருந்தவண்ணம்தான் விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
உங்களுக்கு எந்த வகை விசா தேவை என்பது இரண்டு விடயங்களைப் பொருத்தது…
நீங்கள் எவ்வளவு நாட்கள் பிரான்சில் செலவிட இருக்கிறீர்கள்?
பிரான்சில் என்ன செய்யப்போகிறீர்கள்? என்பவைதான் அவை.
பிரான்ஸ் வழங்கும் சில வகை விசாக்கள் குறித்து பார்க்கலாம்…
1. பிரான்சில் வீடு வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள்
பிரான்சில் வீடு வைத்திருப்போர் visitor விசா பெறவேண்டும். அதிலும் இரண்டு வகை உள்ளது.
நீங்கள் பிரான்சில் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை தங்குவதானால், நீங்கள் தற்காலிக visitor விசா பெறவேண்டும்.
நீங்கள் ஆறு மாதங்களுக்கு அதிகமாக தங்க திட்டமிட்டால், நீண்ட காலம் தங்கும் visitor விசாவுக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
2. ஓய்வு பெற்றவர்கள்
நீங்கள் பிரான்சில் ஓய்வு பெற விரும்பினால், நீங்கள் விண்ணப்பிக்கவேண்டியதும் visitor விசாவுக்குதான்.
Visitor விசா பெறும்போது நீங்கள் பிரான்சில் பணி செய்யமாட்டீர்கள் என உறுதியளிப்பதால், இந்த visitor விசாவுக்கான நிதித் தேவைகள் அதிகம்.
அதாவது, உங்கள் நிதித் தேவைகளை நீங்கள் கவனித்துக்கொள்வீர்கள், பிரான்சுக்கு சுமையாக மாறிவிடமாட்டீர்கள் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டியிருக்கும்.
3, வேறு காரணங்களுக்காக பிரான்ஸ் வருபவர்கள்
ஊதியம் பெறும் வகையிலான பணி எதையும் மேற்கொள்ளாத எந்த பயணமும், உதாரணமாக நீண்ட விடுமுறை, மொழி கற்பதற்காக பயணித்தல் முதலான விடயங்களுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கவேண்டியது visitor விசாவுக்குத்தான்.
4. மாணவர்கள்
பிரான்ஸ் நாடு, மாணவர்களை வரவேற்க ஆர்வமாக உள்ளதால், மாணவர் விசாதான் எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக பெறும் விசா எனலாம்.
5. பிரான்சில் பணி
செய்வதற்கு நீங்கள் பிரான்சில் பணி செய்ய விரும்பினால், உங்களுக்கு ஒரு நிறுவனத்திலிருந்து job offer வழங்கப்பட்டுள்ளதா, நீங்கள் freelancerஆக பணி செய்ய விரும்புகிறீர்களா அல்லது சொந்தத் தொழில் செய்ய விரும்புகிறீர்களா, குறுகிய காலம் பணி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா என்பது போன்ற பல விடயங்களைப் பொருத்து விசா வகை மற்றும் பணி அனுமதி தேவையா என்பது முதலான விடயங்கள் அமையும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.
5. கணவர் அல்லது மனைவி விசா
நீங்கள் ஒரு பிரான்ஸ் நாட்டவர் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தவரை திருமணம் செய்திருந்தால், உங்களுக்கு கணவர் அல்லது மனைவி விசா (spouse visa) பயனளிக்கலாம்.
மற்றவர்கள் மேற்குறிப்பிடப்பட்ட பிரிவினரில் வராத மற்றவர்கள் புலம்பெயர்தல் சட்டத்தரணி ஒருவரை அணுகுவது நல்லது.
kidhours – France Visa in Tamil , France Visa in Tamil update , France Visa in Tamil application
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.