Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது.
![நாசாவில் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு Latest Tamil Kids News 1 Latest Tamil Kids News](https://www.kidhours.com/wp-content/uploads/2022/03/22-6234229e031e2-196x300.jpg)
கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார்.
இந்த நிலையில்யாழ்ப்பாணம் – குப்பிளான் மண்ணின் பெருமையும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாது உலகத்தமிழர்களின் பெருமையும் அமெரிக்க நாசா விண்வெளியில் பணியாற்றி பெருமை சேர்த்த ஈழத்தமிழ் விஞ்ஞானிக்கு பலரும் இரங்கல்களை கூறிவருகின்றனர்.
Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.