Friday, September 20, 2024
Homeசிறுவர் செய்திகள்சர்வதேச மகளிர் தினம் 2022 - “சவாலை தேர்வு செய்யுங்கள்’’ Women's Day in...

சர்வதேச மகளிர் தினம் 2022 – “சவாலை தேர்வு செய்யுங்கள்’’ Women’s Day in Tamil

- Advertisement -

Women’s Day in Tamil  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

ஒவ்வொரு ஆண்டிலும் மகளிர் தினம் வரும்போது, பெண்களின் முன்னேற்றத்தை மையப்படுத்தி ஏதேனும் விஷயத்தை இலக்காக நிர்ணயம் செய்வார்கள். இந்த ஆண்டு “சவாலை தேர்வு செய்யுங்கள்’’ என்ற தலைப்பு நோக்கமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் பெண்களின் சுய பாதுகாப்பு தான் முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது.

சுய பாதுகாப்பின் முக்கியத்துவம்

- Advertisement -

இன்றைய உலகில் ஏறக்குறைய அனைத்து பெண்களுமே வேலைக்கு செல்கின்றனர். ஆண்களை சார்ந்திருக்காமல் தாங்களாகவே மார்க்கெட், கடைத்தெரு, கடற்கரை, பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சென்று வருகின்றனர். தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும்போது பெண்கள் தனியாக செல்வதை இப்போது வழக்கமாக கொண்டுள்ளனர்.

- Advertisement -

அதே சமயம், அனைத்து நேரங்களிலும், தங்கள் சுய பாதுகாப்பு குறித்து பெண்கள் கவனம் கொள்ள வேண்டும். அதுதொடர்பான சில விஷயங்களை இங்கே கொடுத்துள்ளோம்.

Women's Day in Tamil
Women’s Day in Tamil

வீட்டு உதவியாளருக்கு போலீஸ் வெரிஃபிகேஷன்

வீட்டு வேலைகளுக்கு அல்லது உதவிக்காக இன்று பலரும் பணியாளர்களை நியமனம் செய்கின்றனர். வீட்டில் கார் இருந்தால், நிச்சயமாக கார் ஓட்டுநரை பணியமர்த்துவோம். இதுபோன்ற சமயங்களில் எந்தவொரு நபரையும் கண்ணை மூடிக் கொண்டு வேலையில் வைத்துக் கொள்ள முடியாது. அதே சமயம், அவர்கள் குறித்து நாம் நாட்கணக்கில் விசாரித்து கொண்டிருக்கவும் இயலாது. இதற்கு ஒரே தீர்வு, காவல் துறையை அணுகி, தொடர்புடைய நபர் மீது கடந்த காலங்களில் குற்ற வழக்குகள் அல்லது குற்ற பின்னணி எதுவும் இல்லை என்று உறுதி செய்து கொள்வதுதான்.

பாதுகாப்பான கதவு பொருத்தவும்

நீங்கள் வீட்டில் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், நல்ல பாதுகாப்பு மிகுந்த கதவு பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். காலிங் பெல் அடித்த உடனேயே கதவை திறந்துவிட கூடாது. முதலில், வெளியே வந்திருப்பது யார் என்பது குறித்து உறுதி செய்த பிறகு கதவை திறக்கவும்.

Women's Day in Tamil
Women’s Day in Tamil

வீட்டுக்கு தகவல் சொல்லுங்கள்

வேலைக்கு அல்லது கல்லூரிக்கு அல்லது வேறு எங்கு சென்றாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அதுகுறித்து தகவல் சொல்லுங்கள். உங்கள் லொகேஷன் குறித்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள். ஒருவேளை நீங்கள் சிக்கலில் மாட்டினால், அவர்கள் உதவி செய்ய வசதியாக இருக்கும்.

கேப் நம்பரை ஷேர் செய்யவும்

இரவு நேரத்தில் தனியாக பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டால், நீங்கள் பயணிக்கும் கார் நம்பர் குறித்து குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பி விடவும். இரவு நேரத்தில் பேருந்தில் தனியாக பயணிப்பதை தவிர்க்கவும்.

 

kidhours – Women’s Day in Tamil 2022

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.