Tamil Children News Cyclone சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாடுகளான மடகாஸ்கர், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளை அனா என்கிற வெப்ப மண்டல புயல் கடுமையாக தாக்கியதில் 77 பேர் உயிரிழந்திருப்பதாகவும், ஒரு லட்சம் பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கன மழையால் 3 நாடுகளில் பெருவெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டன. இவை அங்கு எண்ணற்ற நகரங்களை முற்றிலுமாக உருக்குலைத்துவிட்டன.
இதேவேளை, தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்திருப்பதாகவும். சுமார் 1,30,000 பேர் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இருப்பிடங்களில் வசித்து வருவதாக தெரியவருகின்றது.மேலும், மலாவி நாட்டில் புயல், மழை வெள்ளத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த நாட்டின் பல்வேறு நகரங்கள் பேரழிவு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதுமட்டும் இன்றி புயலின் தாக்கத்தால் மலாவி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல் மொசாம்பிக்கில் அனா புயலால் 18 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் வெள்ளத்தில் சிக்கி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், டஜன் கணக்கான பள்ளிக்கூடங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவை இடிந்து தரைமட்டமானதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
kidhours – Tamil Children News Cyclone , Tamil Children News Cyclone update
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.