Tamil News Volcano
பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள டோங்கா எனும் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிக்க வெளியாகியுள்ள ஆற்றல், ‘பயங்கரம்’ என்று கடுமையான சுனாமி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, பெரிய அலைகள் ஏற்கெனவே கரையை உடைத்துக் கொண்டு ஊருக்குள் புகத் தொடங்கியுள்ளது.
சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.
அந்த தீவில் உள்ள எரிமலை நேற்று திடீரென வெடித்து சிதறியது. கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ளது. இதனால், கடலில் சுனாமி அலை உருவானது.
சுனாமி அலைகள் டோங்கா தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புகுந்தன. குடியிருப்பு பகுதிக்குள் சுனாமி அலை புகுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
தற்போது மீண்டும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய அளவிலான சுனாமி அலைகள் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதற்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஃபீஜியிலும் அபாயகரமான சுனாமி அலைகள் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 2.7 அடி உயரத்தில் அதாவது 83 செமீ உயரத்துக்கு சுனாமி பேரலை தாக்கியதை டோங்கா தலைநகர் நகுவாலோஃபாவில் பதிவாகியுள்ளது. பாகோநாகோவில் 2 அடி உயர சுனாமி அலைகள் முதற்கட்டமாக பாய்ந்துள்ளது.
Tonga’s Hunga Tonga volcano just had one of the most violent volcano eruptions ever captured on satellite. pic.twitter.com/M2D2j52gNn
— US StormWatch (@US_Stormwatch) January 15, 2022
எரிமலையின் பயங்கர வெடிப்புச் சப்தம் நீண்ட தொலைவுக்குக் கேட்டதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். போலீஸ் மற்றும் ராணுவத்தினர் டோங்காவின் 6ம் கிங் துபூவை அவரது அரணமனையிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். கடலுக்கு அருகில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். எரிமலை வெடித்ததையடுத்து பெரிய வெடிப்பு சப்தம், இடி மின்னல் போன்றவை தோன்றியது.
எரிமலை வெடித்து 3 மைல் அகலமான சாம்பல் புகை வெளியாகி வளிமண்டலத்தில் 12 மைல் உயரம் வரை எழும்பியது. இங்கிருந்து நியூசிலாந்து 1400 மைல் தூரம் இருந்தாலும் அபாயகரமான அலைகள் கரையை தாக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து தேசிய இடர்பாட்டு முகமை வலுவான எதிர்பாராத வழக்கத்துக்கு மாறான பேரலைகள் தாக்கும் என்று எச்சரித்துள்ளது. 1400 மைல்கள் தொலைவில் உள்ள நியூசிலாந்தில் கூட எரிமலை வெடிப்பு சப்தம் கேட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து வெளியாகியுள்ள ஆற்றல் படுபயங்கரம் என்கின்றனர்.
kidhours – Tamil News Volcano , Tamil News Volcano Eruption
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.