Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்2021 ஆம் ஆண்டின் சிறந்த உலக சாதனைகள் World Record 2021

2021 ஆம் ஆண்டின் சிறந்த உலக சாதனைகள் World Record 2021

- Advertisement -

World Record 2021  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

2021ம் ஆண்டின் இறுதி நாட்களில் நாம் இருக்கிறோம். இந்த ஆண்டை சற்று பின்னோக்கிப் பார்த்தால், பல விஷயங்கள் எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம், சில விக்ஷயங்கள் அதிசயமாக இருக்கலாம்.

அந்தவகையில் 2021 ஆம் ஆண்டின் தலைசிறந்த உலக சாதனைகள் என்னவென அறிந்துகொள்வோம்,
26 வயதான இந்திய பாடிபில்டர் பிரதீக் விட்டல் மாற்றுத் திறனாளி. அவர் உடலால் சிறியவராக இருந்தாலும், சாதிப்பதில் பெரியவராக இருக்கிறார். அவர் தனது குறைபாட்டை பலமாக மாற்றி, உலகின் மிகச்சிறிய பாடிபில்டர் (Shortest Bodybuilder World Record) என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

3 அடி 4 அங்குலம் உயரமே உள்ள பிரதீக், தற்போது உலக சாதனையாளர். பாடி பில்டிங்கை தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்ட இந்த சாதனை மனிதர், தனது வாழ்நாள் கனவை நிறைவேற்றிவிட்டார்.

- Advertisement -

தண்ணீரில் மூச்சு விடமால் இருந்து சாதனை:

குரோஷியாவைச் சேர்ந்த 56 வயது நபர் வித்தியாசமான சாதனை (World Record) படைத்துள்ளார். புத்மிர் சோபத் (Budmir Sobat) என்பவர், தண்ணீருக்கு அடியில் அதிக நேரம் மூச்சைப் பிடித்து இருந்து, உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த நபர் நீருக்கடியில் 24 நிமிடம் 37 வினாடிகள் மூச்சை பிடித்தவாறு இருந்து சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு தான் செய்த சாதனையையே அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன்பு 24 நிமிடம் பிறகு 3 வினாடிகள் வரை தண்ணீருக்குள் மூச்சு விடாமல் தாக்குப்பிடித்த சாதனையாளராக இருந்த இவரின் சாதனை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.

நாக்கால் மின்விசிறியை நிறுத்திய பெண்:

ஜோ எல்லிஸ் (Zoe Ellis) என்ற பெண் வித்தியாசமான சாதனையை செய்து உலக சாதனை படைத்துள்ளார். நாக்கால் மின்விசிறியை (FAN) நிறுத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோ, மின் விசிறியின் பிளேட்டை தனது நாக்கால் நிறுத்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி, இந்த சாதனை படைத்துள்ளார்.

முகமூடிகள் அணிந்து சாதனை:

கொரோனாவின் வருகையால், முகக்கவசங்களை அணிய வேண்டியது கட்டாயமாக்கிவிட்டது. மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்ட முகக்கவசம் அணிவதில் ஜார்ஜ் பீல் சாதனை படைத்துள்ளார். முகத்தில் வேகமாக முகக்கவசம் அணிந்து சாதனை செய்தார்.

வெறும் 7.35 வினாடிகளில் 10 முகமூடிகளை முகத்தில் போட்டு உலக சாதனை படைத்தவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் ஜார்ஜ்.

டெசிபல் ஒலி:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நெவில் ஷார்ப் (Neville Sharp), 112.4 டெசிபல் ஒலி எழுப்பியதன் மூலம் பத்தாண்டுகள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். நெவில் ஷார்ப், சராசரி மின்சார துரப்பணத்தை விட சத்தமாக ஒலி எழுப்பினார்.

45 வயதான நெவில் ஷார்ப், தனது மனைவியின் விருப்பப்படி இந்த வித்தியாசமான சாதனைக்கு விண்ணப்பித்து உலக சாதனை படைத்துள்ளார்.

 

kidhours – World Record 2021

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.