Friday, October 18, 2024
Homeபொழுது போக்குமதிநுட்பங்கள்வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...! சுவிட்சர்லாந்து அரசு அனுமதி

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்…! சுவிட்சர்லாந்து அரசு அனுமதி

- Advertisement -

எந்திரமயமாகிவிட்ட இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு எந்திரங்களை கண்டுபிடிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் மனிதன் தனது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு கூட ஒரு எந்திரந்த்தை கண்டுபிடித்திருப்பது சற்று வியப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆம், சுவிட்சர்லாந்தில் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்காக நவீன எந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அந்த எந்திரத்தை பயன்படுத்த அந்த நாட்டு அரசே ஒப்புதல் வழங்கியுள்ளதுதான். சுவிட்சர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 1,300 பேர் கருணைக்கொலை அமைப்புகளின் சேவைகளின் மூலம் தற்கொலை கொண்டதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்...! சுவிட்சர்லாந்து அரசு அனுமதி
வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள நவீன எந்திரம்…! சுவிட்சர்லாந்து அரசு அனுமதி

இந்த நிலையில்தான் ‘டாக்டர் டெத்’ என்று அழைக்கப்படும் கருணைக்கொலை ஆர்வலரும் டாக்டருமான பிலிப் நிட்ச்கே, என்பவர் வலியே இல்லாமல் தற்கொலை செய்து கொள்வதற்கான எந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். சார்கோ கேப்சூல் என அழைக்கப்படும் சவப்பெட்டி போன்ற இந்த எந்திரத்தை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம்.

- Advertisement -

தற்கொலை செய்து கொள்ள விரும்பும் நபர்கள் இந்த எந்திரத்தின் உள்ளே சென்று படுத்து கொள்ள வேண்டுமாம். பின்னர் அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்தியதும் ஒரே நிமிடத்தில் உயிர் பிரிந்துவிடுமாம்..?!! அடுத்தாண்டு முதல் இந்த எந்திரம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.