Saturday, November 30, 2024
Homeசிறுவர் செய்திகள்ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு Tamil Children News

ரூ.15.6 லட்சத்திற்கு ஏலம் போன ஆடு Tamil Children News

- Advertisement -

Tamil Children News  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

விலங்குகளை ஏலம் விடுவது என்பது ஒரு புதிய விஷயம் இல்லை. பல நாடுகளில் தேவைக்கேற்ப அல்லது மக்கள் வளர்க்க விரும்பும் பல விலங்குகள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. நம் நாட்டை பொறுத்த வரை சில முக்கிய பண்டிகைகளின் போது ஆடுகள் ஏலத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது. இதனிடையே மார்ரகேஷ் (Marrakesh) என்ற ஆடு ஆஸ்திரேலிய நாட்டில் சுமார் 21,000 டாலருக்கு அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 15.6 லட்சத்திற்கு ஆன்லைனில் ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு நியூ சவுத் வேல்ஸில் உள்ள கோபார் (Cobar) நகரில் ஏலம் நடந்தது. இது முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த ஏலமாக இருக்கிறது. இவ்வளவு விலை கொடுத்து அந்த ஆட்டை வாங்கியவரின் பெயர் ஆண்ட்ரூ மோஸ்லி (Andrew Mosley). தான் இவ்வளவு செலவழித்து ஏலத்தில் எடுத்துள்ள Marrakesh ஆடு மிகவும் ஸ்டைலாக மற்றும் ஆரோக்கியமாக இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்து இருக்கிறார். இதற்கு முன்னதாக ப்ரோக் (Brock) என்ற பெயருடைய ஆடு இந்திய மதிப்பில் ரூ.6.40 லட்சத்துக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது.

- Advertisement -
Tamil Children News Adu
Tamil Children News Adu

ஏனென்றால் மோஸ்லி மாடு பண்ணை ஒன்றை வைத்து இருக்கிறார். அந்த பண்ணையில் ஆட்டுக்குட்டிகள், ஆடுகள் மற்றும் சில கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். Marrakesh ஆட்டை ஏன் இவ்வளவு விலை கொடுத்து ஏலத்தில் எடுத்தார் என்பதற்கான காரணத்தை ஆண்ட்ரூ மோஸ்லி கூறி இருக்கிறார். Marrakesh ஏன் விலை உயர்ந்தது என்றால் அவற்றின் இனம் மிக அரிதானது என்று குறிப்பிட்டு இருக்கிறார்

- Advertisement -

 

kidhours – Tamil Children News Adu

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.