Latest Tamil Children’s News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சுமார் 3 லட்சம் பேர் வசிக்கும் கரீபியன் தீவுகளில் உள்ள மிகச் சிறிய நாடு பார்படோஸ், கேரி சோபர்ஸ், மால்கம் மார்ஷல் போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களைத் தந்த குட்டித்தீவு. “Little England” என அழைக்கப்படும் பார்படாஸ் கரீபியன் தீவுகளில் செல்வ செழிப்பு மிக்க வளமான நாடாகும்.
400 வருடங்களுக்கு முன்பு இங்கு வந்த இங்கிலாந்துக்காரர்கள், தீவை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு பார்படோஸை தங்களது அடிமை நாடாக மாற்றினர். அன்று முதல் இந்தத் தீவு இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து வந்தது. தற்போது வரை இந்த தீவு நாட்டின் அதிகாரப்பூர்வ தலைவராக இங்கிலாந்து ராணி எலிசபெத் இருந்து வந்தார். 1966- ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்னரும் இங்கிலாந்து ராணியையே தனது தலைவராக பார்படோஸ் ஏற்றுக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் தன்னை குடியரசு நாடாக பிரகடனம் செய்துள்ளது பார்படோஸ். புதிய குடியரசாக அறிவிக்கும் விழா தலைநகர் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. சாம்பர்லின் பிரிட்ஜ் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் நள்ளிரவு 12 மணியானதும் புதிய குடியரசு பிறந்ததாக அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து ராணியின் கொடி இறக்கப்பட்டு, பார்படோஸ் நாட்டின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க தேசிய கீதமும் பாடப்பட்டது.
பார்படோசின் புதிய அதிபராக 72 வயதான சான்ட்ரா மாசான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.
அதிபராக தனது முதல் உரையை நிகழ்த்திய சான்ட்ரா மாசான், இந்த தருணத்திலிருந்து, ஒவ்வொருவரும் புதிய குடியரசின் வாழும் உருவமாக மாறுவார்கள் என பெருமிதத்துடன் கூறினார். charge and call என்ற முழுக்கத்தை முன்வைத்த மாசான், நாட்டின் எதிர்காலத்தை ஒவ்வொருவரும் வடிவமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள், வாண வேடிக்கை என குடியரசு தின விழா களைகட்டியது.
பார்படோசின் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கலந்துக்கொண்டார். 54 நாடுகளை கொண்ட பிரிட்டன் காலனி நாடுகளின் காமன் வெல்த் அமைப்பில் தொடர்ந்து பார்படாஸ் உறுப்பினராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Latest Tamil Children’s News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.