Tamil Latest Children’s News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸானது தற்போது உலகம் முழுவதும் பரவி பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து அதனுடைய திரிபான டெல்டா வைரஸும் அனைவரையும் ஆட்டம் காண வைத்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்னாபிரிக்காவில் புதிய திரிபான ஒமிக்ரோன் என்ற வைரஸ் கண்டறியப்பட்டது.
தற்போது இந்த வைரஸானது 17 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும், குறித்த நடக்குகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி தென்ஆப்பிரிக்கா , ஹாங்காங், போட்ஸ்வானா , ஆஸ்திரேலியா , இத்தாலி , ஜெர்மனி , நெதர்லாந்து , இங்கிலாந்து , இஸ்ரேல், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, கனடா, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுக்கல், டென்மார்க், செக் குடியரசு போன்ற நாடுகள் கூறப்படுகின்றது.
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.