Thursday, November 14, 2024
Homeகல்விபொது அறிவு - உளச்சார்புசர்வதேச பெண் குழந்தைகள் தினம் - அக்டோபர் 11 # World Women Child Day...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் – அக்டோபர் 11 # World Women Child Day October 11

- Advertisement -

World Women Child Day சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூகமாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாயந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும்.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், உங்கள் வீட்டில் இருப்பவர்கள், உறவினர்கள், தோழிகள் உள்ளிட்டோருக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாழ்த்துச் செய்திகளை அனுப்பி, அவர்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

- Advertisement -

1995 ஆம் ஆண்டில், பல்வேறு பிரச்னைகளால் பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு, பெய்ஜிங்கில் நடந்த பெண்களுக்கான உலக மாநாட்டில், பெண் குழந்தைகளுக்காகவும் பெண்களுக்காகவும் ஒரு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. சிறுமிகள் மற்றும் இளம் பெண்கள் எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகள் குறித்து இதில் பேசப்பட்டது.

- Advertisement -
World Women Child Day
World Women Child Day

அப்போது, அக்டோபர் 11 ஆம் தேதியை பெண் குழந்தைகள் தினமாக அறிவிப்பதற்கான தீர்மானம், ஐ.நா.சபையால் டிசம்பர் 19, 2011 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும் அவர்களின் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்-பெண் சமத்துவம் மற்றும் பெண்களின் வளர்ச்சியை வலியறுத்தும் விதமாக கடந்த 2012 முதல் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பாலின பாகுபாடின்றி பெண் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், கற்றல் வசதிகள், இளம்பெண்ககள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, திறமை அடிப்படையில் அதிகாரமளித்தல், அனைத்துத் துறைகளிலும் சம வாய்ப்பு வழங்குதல், பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறைத்து அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை ஐ.நா.வால் வலியுறுத்தப்படுகின்றன.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு பெண் குழந்தை நாளுக்கான கருப்பொருள் ‘எண்ம தலைமுறை; நம் தலைமுறை'(Digital generation’. Our generation).

பெண்கள் பல்வேறு வழிகளில் எண்ம வழிமுறைகளை அறிந்து தொழில்நுட்ப வல்லுநர்களாக சிறந்து விளங்கவும் கருத்துச் சுதந்திரம், மகிழ்ச்சியுடன் இருக்கவும், இந்த தலைமுறை பெண்கள், இனம், பாலினம், மொழி, திறன், பொருளாதார நிலை மற்றும் புவியியல் தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அவர்களின் முழு திறனையும் விரிவுபடுத்த தொழில்நுட்ப வழிகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலகளவில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் மக்கள்தொகை 48%. உலகளவில் 15-19 வயதுக்குள்பட்ட 4ல் ஒரு பெண்ணுக்கு கல்வியோ, வேலைவாய்ப்போ கிடைப்பதில்லை. ஆனால், ஆண்களில் 10ல் ஒருவருக்கே இந்த நிலை இருக்கிறது. எனவே, ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளுக்கும் வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதுதவிர, பெண் குழந்தைகள் மற்றும் பெண்களின் வளர்ச்சி மேம்பாட்டு வந்தாலும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை.

World Women Child Day
World Women Child Day

தற்போதைய காலகட்டத்தில் பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அனைத்துத் துறைகளிலும் சமவாய்ப்பு வழங்குவதுடன் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைக்கப்பட சட்டங்களை வலுவாக்க வேண்டும் என்பதும் ஒரு பொதுவான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது.

 

 

kidhours – World Women Child Day

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.