Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலகில் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் (2021-ம் ஆண்டிற்கான) பட்டியலில், கடந்த ஆண்டை விட இந்தியா 6 இடங்கள் பின்னோக்கி சென்று உள்ளது. மிகவும் பயணத்திற்கு ஏற்ற பாஸ்போர்ட்களை கொண்ட உலக நாடுகளை பட்டியலிடும் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸில் (Henley Passport Index) கடந்த ஆண்டு 84-வது இடத்தில இருந்த இந்தியா, தற்போது 6 இடங்கள் கீழிறங்கி பட்டியலில் 90-வது இடத்திற்கு சென்று உள்ளது.
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கோவிட் தொற்று துவங்கி சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு, இன்டர்நேஷ்னல் விசிட்டர்களுக்கான பயண விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை நிலைமைக்கேற்ப பல நாடுகள் தளர்த்தி கொண்டிருக்கும் வேளையில், ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த பட்டியல் சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (International Air Transport Association) வழங்கிய டேட்டாக்களின் பகுப்பாய்வை அடிப்படையாக கொண்டு வெளியிடப்பட்டு இருக்கிறது. ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிந்தது என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் இந்த பட்டியலில் நாடுகள் தரவரிசைபடுத்தப்பட்டு உள்ளன. அதன்படி இந்த ஆண்டு பட்டியலில் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 2 நாடுகள் முதலிடத்தில் இருக்கின்றன. இந்த இரு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்கள் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தென் கொரியா மற்றும் ஜெர்மனி ஆகிய 2 நாடுகள் ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸில், இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் ஏமன் உள்ளிட்ட நடுகல் குறைந்த சக்திவாய்ந்த நாடுகளாக பட்டியலின் கீழே இருக்கின்றன. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு 84-வது இடத்தில் இருந்த இந்தியா, 90-வது இடத்திற்கு சரிந்தது. இந்தியாவுடன் 90-வது இடத்தை தஜிகிஸ்தான் மற்றும் புர்கினா பாசோ ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.
உலகின் மிக சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்கள்:
*இங்கே ஸ்கோர் என்பது அந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை வைத்து எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்பதை குறிக்கிறது.
1. ஜப்பான், சிங்கப்பூர் (ஸ்கோர்: 192)
2. ஜெர்மனி, தென் கொரியா (ஸ்கோர்: 190)
3. பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் (ஸ்கோர்: 189)
4. ஆஸ்திரியா, டென்மார்க் (ஸ்கோர்: 188)
5. பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, போர்ச்சுகல், சுவீடன் (ஸ்கோர்: 187)
6. பெல்ஜியம், நியூசிலாந்து, சுவிட்சர்லாந்து (ஸ்கோர்: 186)
7. செக் குடியரசு, கிரீஸ், மால்டா, நோர்வே, யுனைட்டட் கிங்டம், அமெரிக்கா (ஸ்கோர்: 185)
8. ஆஸ்திரேலியா, கனடா (ஸ்கோர்: 184)
9. ஹங்கேரி (ஸ்கோர்: 183)
10. லிதுவேனியா, போலந்து, ஸ்லோவாக்கியா (ஸ்கோர்: 182)
உலகின் குறைந்த சக்திவாய்ந்த 10 பாஸ்போர்ட்கள்:
1. ஈரான், லெபனான், இலங்கை, சூடான் (ஸ்கோர்: 41)
2. பங்களாதேஷ், கொசோவோ, லிபியா (ஸ்கோர்: 40)
3. வட கொரியா (ஸ்கோர்: 39)
4. நேபாளம், பாலஸ்தீன பிரதேசம் (ஸ்கோர்: 37)
5. சோமாலியா (ஸ்கோர்: 34)
6. ஏமன் (ஸ்கோர்: 33)
7. பாகிஸ்தான் (ஸ்கோர்: 31)
8. சிரியா (ஸ்கோர்: 29)
9. ஈராக் (ஸ்கோர்: 28)
10. ஆப்கானிஸ்தான் (ஸ்கோர்: 26)
kidhours – Latest Tamil Kids News,Latest Tamil Kids News portal
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.