உலக ஆசிரியர் தினம் உரை World Teacher’s Day In Tamil
உலக ஆசிரியர் தினம் உரை
மதிப்பிற்குரிய இவ்வார கடைமையாசிரியர் திருமதி சாந்தி அவர்களே, அன்பிற்கும் பண்பிற்கும் உரிய தலைமையாசரியர் அவர்களே, எங்கள் பாசத்திற்குரிய துணைத்தலைமையாசிரியர்களே, நேசத்திற்குரிய ஆசிரிய ஆசிரியைகளே, என் சக மாணவர் தோழர்களே, உங்கள் அனைவருக்கும் இவ்வினிய காலை வேளையில் என் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. கல்வித் தொடர்பாக மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த கல்வியாளர்களையோ, கல்வி சம்பந்தப்பட்ட சிறப்பான நிகழ்வுகளையோ நினைவுக்கூரும் வகையில் உலக ஆசிரியர் தினம் வருகிறது.
இன்றைய நன்னாளில் மாணவர்கள் சார்பில் ஆசிரியர் தின உரை ஆற்றுவதற்கு எனக்குக் கிடைத்த இவ்வாய்ப்பை மிகப் பெருமையாகக் கருதுகிறேன். ஆசிரியப் பெருந்தகைகளே, உங்கள் அனைவருக்கும் என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.
மாணவர்களே,இன்று ஒக்டோபர் 05 . நமக்குக் கல்விக் கண்களைத் திறந்து வைக்கும் ஆசிரியத் திலகங்களைக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் இனிய உலக ஆசிரியர் தினநாள். முதலில் இத்தினம் எதற்காகக் கொண்டாடப்படுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு வெற்றுத்தாளாய் பள்ளியில் காலடி எடுத்து வைக்கும் நம்மை, ஒரு புத்தகமாய் வெளிக்கொணருபவர்கள் ஆசிரியர்கள். ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி, நம் பாதையில் வெளிச்சங்களைப் பாய்ச்சும் தெய்வங்கள் அவர்கள். அப்படிப்பட்ட தெய்வங்களை நாம் பூஜிக்கும் நாளே இந்த ஆசிரியர் தினம்.
என் இனிய மாணவர்த் தோழர்களே,இன்னும் 10 அல்லது 20 வருடங்களில் நாம் ஒரு பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, விஞ்ஞானிகளாகவோ, கணினி நிபுணர்களாகவோ, ஏன் ஒரு பெரும் செல்வந்தராகவோ இவ்வாழ்க்கைப் பாதையில் வலம் வரலாம். ஆனால் நம் ஆசிரியர்கள், இங்கேயே இன்னும் நம்மைப் போன்று இன்னும் பல ஆயிரம் மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாதைகளைக் காட்டிக் கொண்டேதான் இருப்பார்கள்.
அன்புச் சகோதர சகோதரிகளே,கல்வியில் மட்டுமா நாம் வழிகாட்டப்படுகிறோம். அன்பால், பண்பால், எதிர்காலத்தில் குடும்பத்திற்கு நன்மக்களாய், நாட்டிற்கு நன்குடிமக்களாய், சமுதாயத்திற்கு வைரமாய் உருவாக்கப்படுகிறோம்.
‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
என்றார் திருவள்ளுவப் பெருகமனார். அப்படிப்பட்ட சிறந்த மனிதராக, மனித நெறிப்படி வாழ வழிகாட்டுபவர்கள் ஆசிரியர்கள். அவர்களுக்கான, இத்தினத்தைத் கொண்டாடுவது நமக்கல்லவோ பெருமை.
எங்கள் அன்புத் திலகங்களான ஆசிரியர்களே,இந்நாளில் நாங்கள் வழங்கும் வாழ்த்துகள், பரிசுகள், விருந்துகள் மட்டும் உங்களுக்கு மகிழ்ச்சியை ஊட்டாது என எங்களுக்குத் தெரியும். உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் நாங்கள் கல்வியில் சிறந்து, வாழ்க்கையில் உயர்ந்து, சமுதாயத்தில் மலராய் மலர்ந்து மணம் பரப்புவோம் என இவ்வேளையில் உங்களுக்கு உறுதி கூறுகிறோம். உங்கள் கனவுத்தோட்டங்களில் நாங்கள் என்றென்றும் மணம் பரப்புவோம் என்பதில் சிஞ்சிற்றும் ஐயமில்லை.
இறுதியாக, நான் விடைபெறும் முன் மீண்டும் உங்கள் அனைவருக்கும் மாணவர்கள் சார்பில் என் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
kidhours – World Teacher’s Day in Tamil,World Teacher’s Day in Tamil Katturai,World Teacher’s Day in Tamil Speach
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.