Latest Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் சில மீன்கள், மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்றால் நம்ப முடிகிறதா. இந்த மீன்கள் கடித்தால் பக்கவாதம் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு மீன் பிரிட்டனின் கடற்கரையில் முதல் முதலாக காணப்பட்டது. அது லயன்பிஷ் ஆகும்.
மனிதர்களுக்கு பக்கவாதத்தை ஏற்படுத்தும் அல்லது கொல்லும் வகையிலான விஷம் கொண்ட லயன்பிஷ் பிரிட்டனின் கடற்கரையில் முதன்முறையாகக் காணப்பட்டன. இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடத்தில் காணப்பட்டது. தி சன் செய்திகளின்படி, 39 வயதான அர்ஃபான் சம்மர்ஸ் 6 அங்குல லயன்பிஷ் என்ற மீனை பிடித்தார். இது விஷத்தால் நிறைந்த 13 முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது.
தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன, ஆனால் புவி வெப்பமடைதல் காரணமாக, அவை இப்போது மத்திய தரைக்கடல் கடல் பகுதியிலும் பரவலாக காணப்படுகின்றன. இந்த மீன்கள் , கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும். இந்த வகை மீன் இத்தாலியில் இருந்து பிரிட்டனை அடைந்ததாக கடல் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.
லயன்ஃபிஷ் நீளம் 5 செமீ முதல் 45 செமீ வரை இருக்கும். 1.5 கிலோ வரை இருக்கும். இது மிகவும் நச்சுத் தன்மையை கொண்டுள்ளது. இது கடித்தால், வலியால் துடித்து போவார்கள். இது கடித்தால் கடுமையான வலி, மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவை ஏற்படுகிறது. இந்த மீன் கடித்தால் பக்கவாதம் கூட ஏற்படலாம், சில சமயங்களில் மரண அபாயமும் உள்ளது.
kidhours – Latest Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.