Tamil Kids Education
ஆண்டுதோறும் உலக அமைதி நாள் செப்டம்பர் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, போர் சூழல் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த நாளின் முக்கிய அம்சமாகும். எல்லை மற்றும் உள்நாட்டு பிரச்சனைகளால், அந்த பிராந்திய பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் நிலவுவதால், அதனை தடுத்து மனித சமூகம் அமைதியான முறையில் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, ஐ.நா உறுப்பு நாடுகளின் ஒட்டுமொத்த ஆதரவுடன் இந்த நாள் தோற்றுவிக்கப்பட்டது.
சர்வதேச அமைதி நாள் முதன்முதலாக 198ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர், 2001ம் ஆண்டு போர் நிறுத்த நாளாகவும் மாற்றியமைக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையே மற்றும் உள்நாடுகளில் அமைதியை நிலைநிறுத்தும் நோக்கில் ஐ.நா உறுப்பு நாடுகள், இந்த முடிவுக்கு பேராதரவைத் தெரிவித்தன.
சர்வதேச அமைதி நாளின் 2021-ன் நோக்கம், ’சமமான மற்றும் நீடித்த வளர்ச்சியை பெற உலகம் மீளட்டும்’ என்ற மையக்கருத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஒட்டுமொத்த உலகின் பொருளாதாரமும் மிகப்பெரிய சரிவை சந்தித்திருப்பதால், இதில் இருந்து உலக நாடுகள் சமமான மற்றும் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்குரிய வகையில், சிந்திக்குமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச அமைதி நாள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், தாழ்த்தப்பட்ட, சமூகத்தில் மிகவும் பின்தங்கியிருக்கும் குழுக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்தித்திருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸினால் ஏற்பட்ட பாதிப்பு உலகெங்கும் சமத்துவமின்மையை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா, அதற்கு சான்றாக தொற்றுநோய் பாதிப்புக்குள்ளான நாடுகள் பெற்றுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை கூறியுள்ளது.
அதாவது, ஏப்ரல் 2021 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கும் 687 மில்லியனுக்கும் அதிமான தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டிருந்தாலும், 100க்கும் மேற்பட்ட நாடுகள் தற்போது வரை முதல் டோஸைக் கூட பெறவில்லை என தெரிவித்துள்ளது. வளர்ந்த நாடுகளுக்கும், பின்தங்கிய நாடுகளுக்கும் இருக்கும் இடைவெளிக்கு இதுவே தக்க சான்று எனத் தெரிவித்துள்ள ஐ.நா, போர்ச்சூழலில் சிக்கியவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் கூட கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வறுமைச் சூழலில் இருக்கும் நாடுகளுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என கூறியுள்ளது. இது ஒருபுறம் இருக்க, காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாக ஐ.நா கூறியுள்ளது. இயற்கையுடன் சமாதானம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஐ.நா, காலநிலை மாற்றத்தை தடுக்கவும், பசுமை நிலையை மேம்படுத்தவும் உலகளவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உறுப்பு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. பசுமை இல்ல வாயு உமிழ்வை குறைத்தால், காலநிலை மாற்றத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் ஐ.நா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
kidhours – Tamil Kids Education,Tamil Kids Education siruvar kalvi ,Tamil Kids Education kalvi
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.