Tamil kids latest news dolphin சிறுவர்களுக்கான உலக செய்திகள்
டென்மார்க் நாட்டின் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் பாரம்பரியத் திருவிழாவிற்காக 1500 டால்பின்கள் கொன்று குவிக்கப்பட்டது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடற்பகுதியில் பரோயே தீவுக்கூட்டம் உள்ளது.
இந்தத் தீவுகளில் வசிக்கும் மக்கள் தங்களது பாரம்பரியத் திருவிழாவைக் கொண்டாடும் விதமாக கடற்பகுதியில் உள்ள 1500 டால்பின்களை ஒரே நேரத்தில் வேட்டையாடி உள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையில் டால்பின்கள் வேட்டையாடப்பட்டது சூழலியல் ஆர்வலர்களிடையே கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.
கடல்வாழ் சூழலுக்கு மிகுந்த நன்மையைத் தரும் டால்பின்கள் கொல்லப்பட்டதால் அந்தத் தீவுகளின் கரைகள் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.இந்நிலையில் சூழலியல் சமநிலையைப் பேணும் விதமாக அரசு இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
kidhours – Tamil kids latest news dolphin
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.